கண்ணூர் ஸ்பாவில் 5 பெண்கள்.. அவர்கள் சொன்னதை கேட்டு அதிர்ந்த போலீஸ்.. இவர்கள் யார் தெரியுமா?

  • சென்னை: கண்ணூரில் ஸ்பாக்களில் வேலை பார்த்த 5 வங்கதேச பெண்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம், இப்போது கேரள மாநிலத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஆரம்பத்தில் இது ஏதோ சாதாரண சட்டவிரோத தங்கல் வழக்கு என்றுதான் அனைவரும் நினைத்தார்கள்.. ஆனால், கைது செய்யப்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட அடுக்கடுக்கான விசாரணையில்தான் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகத் தொடங்கியுள்ளன. என்ன நடந்தது?

    Advertisement

    கண்ணூர் ரயில் நிலையம் அருகே My Spa Ayurvedic Hub என்ற ஸ்பா சென்டர் இயங்கி வருகிறது.. இந்த சென்டரில் திடீரென போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.. அப்போது 29 வயதான சலீனா அக்தர் என்பவர் முதன்முதலில் போலீசாரிடம் சிக்கினார்.

    Advertisement

    கண்ணூர் ஸ்பா

    அவரிடம் இந்தியாவில் தங்குவதற்கான பாஸ்போர்ட், விசா என எந்த ஒரு சட்டப்பூர்வ ஆவணமும் இல்லை! அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோதுதான், வங்கதேச அரசின் தேசிய அடையாள அட்டையின் போட்டோ இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.. அதுமட்டுமல்லாமல், அவர் ஏற்கனவே கவுகாத்தி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் வேலை பார்த்த அனுபவம் கொண்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சலீனா அக்தரை போலீசார் கைது செய்தனர்..

    பிறகு நகரின் இன்னொரு பகுதியிலுள்ள Ayush Spa-விலும் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பணியாற்றி வந்த நஸ்மா அக்தர், தஸ்லிமா காத்தூன், மொய்னா காத்தூன், நஸ்ரின் பீபி ஆகிய 4 வங்கதேச பெண்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். வாடகை வீட்டில் தங்கியிருந்த இவர்கள், ஆரம்பத்தில் வேறு பெயர்களில் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டார்களாம்..

    Advertisement

    வங்கதேச அடையாள அட்டைகள்

    ஆனால், வழக்கம்போல இவர்களது செல்போன்களிலும் வங்கதேச அடையாள அட்டைகளின் புகைப்படங்கள் இருந்தது உண்மைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

    வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு, மேற்கு வங்கம் வழியாக போலி இந்திய அடையாள ஆவணங்களை இவர்கள் பெற்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கொல்கத்தாவிலிருந்து பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து கண்ணூரில் உள்ள ஸ்பாக்களுக்கு அனுப்பி வைக்கும் வகையில் தனித்தனி குழுக்கள் செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலி அடையாள அட்டைகளை தயாரிக்கவே தனியாக ஏஜென்சிகள் செயல்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன!

    அதிர்ந்த போலீஸ்

    இந்த பரபரப்பான விவகாரத்தை அடுத்து, கண்ணூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் வெல்னஸ் மையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் (குறிப்பாக வெளிமாநில ஊழியர்களின்) அடையாள ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்க போலீசார் அதிரடி உத்தரவிட்டுள்ளனர்!

    Advertisement

    இதனிடையே, Ayush Spa உரிமையாளர் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.. "கைது செய்யப்பட்ட பெண்கள் கொல்கத்தா அட்ரஸ் ஆவணங்களை காட்டினார்கள், மாதம் ரூ.15,000 சம்பளத்தில் 18 நாட்களுக்கு முன்புதான் வேலையில் சேர்ந்தார்கள்" என்று விளக்கம் தந்துள்ளார்..

    ஆனால், போலி ஆவணங்கள் மூலம் இவர்கள் வங்கிக் கணக்குகள் மற்றும் சிம் கார்டுகளைப் பெற்றுள்ளனரா என்ற கோணத்தில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை வைத்து போலீசார் சல்லடை போட்டு ஆய்வு செய்து வருகின்றனர்!

    அதேபோல எழிமலாவில் உள்ள கடற்படை அகாடமியில் ஒரு வருடமாக வேலை பார்த்து வந்த 32 வயதான விப்லவ் சோரன் என்ற இன்னொரு வங்கதேசவாதியும் கைது செய்யப்ட்டுள்ளார்..

    Advertisement

    வெறும் 4 நாட்களில் 6 வங்கதேசத்தினர்

    இப்படி வெறும் 4 நாட்களில் 6 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. கண்ணூர் முழுவதும் அதிரடி சோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன..

    அங்குள்ள ஸ்பாக்கள் மற்றும் வெல்னஸ் மையங்களில் பணியாற்றும் ஊழியர்களின், குறிப்பாக வெளிமாநில ஊழியர்களின், அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் மத்திய அமைப்புகளின் கவனத்துக்கும் சென்றுள்ளது.

    ஆனால் இத்தனை பேருக்கும் போலி அடையாள அட்டைகளை உருவாக்கியது யார்? பெங்களூருவில் இருந்து அழைத்து வந்தது யார்? என்று தெரியவில்லை.. அதனால் விசாரணை வளையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    English Summary

    Kannur Spa 5 Women Arrested.. What Did They Tell Police? Shocking Details Emerge