விஜய் குறித்து பிரேம்ஜி வீடியோ.. கோட் படத்தில் 'டிராபிக் எஸ்ஐ' சேலம் தவெக எம்எல்ஏ பார்த்திபன்
சென்னை: நடிகர் பிரேம்ஜி அமரன், தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தின் காட்சியை இப்போது பகிர்ந்து இருந்தார். அந்த காட்சியில் விஜய் தனது பெயரை பயன்படுத்தி பிரேம்ஜியை போலீஸ் பிடித்து அபராதம் விதிக்க கூறுவார். இந்த காட்சியின் படியேதான், நமது முதலமைச்சர் விஜய் அண்ணா, மிகவும் கண்டிப்பானவர்; எனவே, அனைவரும் நல்லவர்களாக இருங்கள், நல்லதையே செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். அவர் பதிவு ஒரு பக்கம் என்றால், கோட் படத்தில் டிராபிக் போலீஸ் பிரேம்ஜியை பிடிக்கும் பார்த்திபன் தான். தற்போது சேலம் தவெக எம்எல்ஏ ஆவார். இதுபற்றி பலரும் சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல்வர் விஜய் நடிகராக இருந்த போது நடித்த படம் கோட்.. இதன்பிறகு விஜய் நடிப்பில் எந்த படமும் இன்னமும் வெளியாகவில்லை.. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக போகிறது. கோட் திரைப்படத்தில் விஜய், சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன் , பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்திருந்தனர். விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். அதில் ஒருவர் ஹீரோவாகவும், இன்னொரு விஜய் பக்கா வில்லனாகவும் மிரட்டி இருப்பார்.இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் ஆகும்.

இந்த கோட் படத்தில் வரும் காட்சி ஒன்றில், டிராபிக் போலீசிடம் பிரேம் அமரன் மாட்டிக்கொள்வார். அப்போது டிராபிக் போலீசிடம் பிரேம்ஜி எகிறுவார்.. எங்க மாமா யார் தெரியுமா? அவர் கட்சி என்ன தெரியுமா.. கட்சி பெயரை சொல்லக்கூடாது என்று கூறியிருக்கிறார். அவர் நினைத்தால், நீ பதவியில் இருக்க மாட்டாய்.. விஜய் மாமாவிடம் பேசு என்று போன் போட்டுக் கொடுப்பார்..
அப்போது விஜய் அந்த டிராபிக் போலீசிடம், விஜய் பெயரை கேட்பார். அதற்கு டிராபிக் போலீஸ், அதெல்லாம் எதற்கு சார்.. ராங் ரூட்டில் வந்து ரூல்ஸ் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று கூறுவார். தொடர்ந்து விஜய் பெயரைத்தான் கேட்பார். அப்போது அவர் எஸ்ஐ இளவரசு என்பார்.. தொடர்ந்து பேசும் விஜய், அவன் பண்ண தவறுக்கு என்ன அபராதமோ, ஒரு ரூபாய் கூட குறையில்லாமல் வாங்கிவிடுங்கள்.. அவன் ஏதாவது செய்து எஸ்கேப் ஆனது தெரிந்தால், உங்கள் மீது நான் கேஸ் போடுவேன் என்று விஜய் கூறுவார்.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரேம்ஜி அமரன் "நமது முதலமைச்சர் விஜய் அண்ணா, மிகவும் கண்டிப்பானவர்; எனவே, அனைவரும் நல்லவர்களாக இருங்கள், நல்லதையே செய்யுங்கள் " என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள்.. இது உண்மை தான் என்று கூறுகிறார்கள். அதேநேரம் இன்னொரு சுவராஸ்யமான விஷயத்தையும் நெட்டிசன்கள் கூறினார்கள். கோட் படத்தில் எஸ்ஐ இளவரசாக நடித்து பிரேம்ஜியை பிடிக்கும் நபர், இப்போது தவெக எம்எல்ஏ என்கிறார்கள். சேலம் எம்எல்ஏ பார்த்திபன் தான் கோட் படத்தில் டிராபிக் எஸ்ஐ ஆக நடித்திருந்தார் என்று ஆச்சரியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்கள். இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
Our CM is very strict so all be good do good 💖🙏 pic.twitter.com/Cq5n7edmKo
— PREMGI (@Premgiamaren) May 11, 2026














Click it and Unblock the Notifications