Advertisement

கொரோனா வைரஸ் கல்லீரலை பாதிக்கும்.. உயிருக்கும் உலை வைக்கும்.. எச்சரிக்கும் மருத்துவர்!


டெல்லி: கொரோனா வைரஸ் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கொரோனா… வாய்பகுதி அறிகுறிகள்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19-ஆம் தேதி உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கேஸ்ட்ரோஎன்டிராலஜி துறை மருத்துவர் அரவிந்த் சாஹ்னி கூறுகையில் கொரோனா வைரஸ் கல்லீரல் சார்ந்த நோய்களுக்கு மற்றொரு வடிவத்தை கொடுக்கிறது.

அந்த கொரோனா மட்டும் என் கையில கெடச்சா.. அப்படியே எடுத்து பட்னவீஸ் வாய்ல போட்ருவேன்.. சிவசேனா எம்எல்ஏ

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு உயிருக்கு உலை வைக்கும். எனவே கல்லீரல் சார்ந்த நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.

புற்றுநோய்

சைலன்ட் கில்லரான ஹெபடைட்டிஸை கையாள இரண்டே வழிகள்தான் உள்ளன. பரிசோதனைகள் மூலமும் முன்கூட்டியே கண்டறிதல் மூலமும் கையாளலாம். குரோனிக் மஞ்சள் காமாலை எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் வரும். அவ்வாறு வந்தால் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கி உயிருக்கே ஆபத்தை கொடுக்கும்.

Advertisement
Advertisement
கல்லீரல்

ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் பி ஆகியவற்றுக்கு தடுப்பூசிகளும் உள்ளன. உடலில் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். இதுதான் நூற்றுக்கணக்கான பணிகளை செய்கிறது. அளவுக்கு அதிகமாக மது குடித்தாலும் அது கல்லீரலுக்கு கெடுதலை உண்டாக்கும்.

லிவர் நோய்

கொழுப்பு உணவுகளை உண்டால் ஃபேட்டி லிவர் நோய் வரும். கல்லீரல் நோய்க்கு பொதுவான அறிகுறி மஞ்சள் காமாலைதான். ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ ஆகியவை தண்ணீர் மூலம் பரவும், ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி ஆகியவை ரத்த மூலம் பரவும். இவை கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும்.

தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு ஒன்இந்தியா தமிழ் டெலிகிராம் சானல்

English Summary

Coronavirus infection can cause liver damage, experts says.
Read more...