முதல் பார்வையிலேயே விழுந்துட்டேன்.. ராஜீவ் காந்தியுடன் காதல் மலர்ந்தது எப்படி? மனம் திறந்த சோனியா

  • டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் காதல் கொண்டது எப்படி? இருவரும் முதல் முதலில் சந்தித்தது எங்கே? என்ற சுவாரஸ்ய தகவலை காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சோனியா காந்தி பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கை தொடங்கினார். அதன்பிறகு நேற்று சோனியா காந்தி,
    எக்ஸ் வலைத்தளத்தில் முதன்முறையாக கணக்கு தொடங்கினார்.

    Advertisement

    சோனியா காந்தி, தனது சுயசரிதையை எழுதியுள்ளார். 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' (Belonging: A Journey of Love) என்று பெயரிடப்பட்ட சுயசரிதை புத்தகம் நவம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்த புத்தக வெளியீட்டை தொடர்ந்து அதற்கான முன்னோட்ட வீடியோவை சோனியா காந்தி வெளியிட்டுள்ளார்.

    அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் எப்படி காதல் ஏற்பட்டது, அவருடனான தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பழைய புகைப்படங்களை பகிர்ந்து விவரித்துள்ளார். இதுதொடர்பாக சோனியா காந்தி கூறியதாவது: ''1960களின் மத்தியில் இங்கிலாந்தில் உணவுகள் மோசமாக இருந்தது. இங்கிலாந்தில் நல்ல உணவகங்களைக் கண்டறிவது கடினமாக இருந்தது. அப்போது உணவகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக தான் இருந்தது. என்னை பொறுத்தவரை என் மனதுக்கு பிடித்த இத்தாலி நாட்டின் உணவுகளை போல் இருக்கும் உணவுகளை சாப்பிட விரும்புவேன்.

    Advertisement

    அப்படித்தான் கேம்பிரிட்ஜில் ஒரு கிரேக்க உணவகத்தை கண்டுபிடித்தேன். இந்த கிரேக்க உணவகம் என்பது இந்திய மாணவர்கள் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. நிறைய பேர் வந்து செல்வார்கள்.

    இந்த சிறிய கிரேக்க உணவகத்தில் எனது காதல் பயணம் தொடங்கியது. அங்கு தான் ராஜீவ் காந்தியை முதல் முதலில் சந்தித்தேன். அவரை முதன்முதலில் பார்த்தபோதே, அவருடன் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று உணர்ந்தேன். அவருக்கும் அதே உணர்வுதான் இருந்தது என்பதையும் தெரிந்து கொண்டேன். நான் காதலில் விழுந்துவிட்டேன்.

    Advertisement

    ஒரு பொதுவான நண்பர் எங்களை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பிறகு நாங்கள் நண்பர்களானோம். நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிகளுக்கு செல்வோம். 'வேலன்டைன் பார்ட்டிக்கும் சென்றோம். அவர் மிகவும் மென்மையான தோற்றம் கொண்டவராக இருந்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தார். அவரிடம் மென்மையான குணம் வெளிப்பட்டது. அதுதான் என் மனதைத் தொட்டது.என்னை கவர்ந்தது

    அவரை முதன்முதலில் சந்தித்த அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ராஜீவும் நானும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் நினைவுகள் நிறைந்த ஒரு உலகத்தை உருவாக்கினோம். அந்த உலகத்தை நவம்பர் 10-ஆம் தேதி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

    English Summary

    Senior Congress leader and Rajya Sabha MP Sonia Gandhi has shared interesting details about how she fell in love with the late former Prime Minister Rajiv Gandhi, and where the two first met.