முழங்கால் வலி சார்! ஒய்யாரமாக சாய்ந்த சுஜாதா! ஆந்திரா அரசு பள்ளியில் கால் அழுத்திய பழங்குடியின மாணவி
சித்தூர்: பள்ளிகளில் ஒழுக்கத்தை போதிக்கக்கூடிய ஆசிரியர்களே அட்டகாசங்கள் செய்தால் எப்படி? மாணவ, மாணவர்களை வழிநடத்தக்கூடியவர்கள் யார் என்று ஆந்திர மாநில வீடியோவுக்கு இணையவாசிகள் கொதிப்புடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. அரசு பள்ளியில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகாத நிலையில், இது தொடர்பான செய்திகளும் இணையத்தில் வேகவேகமாக பரவி வருகின்றன.
ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், முள்ளைய்ய பூடி மண்டலத்தில் உள்ளது பந்தபள்ளி என்ற கிராமம்.. இங்கு பெண்கள் பழங்குடியினர் ஆசிரம பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது..

அதாவது இது கிரிஜன ஆசிரம அரசு மகளிர் பள்ளியாகும்.. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றார்கள்.
ஒய்யாரமாய் உட்கார்ந்த சுஜாதா
இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சுஜாதா என்பவர், தனக்கு மசாஜ் செய்துவிடும்படி, மாணவிகளிடம் கூறியிருக்கிறார்... பள்ளி வகுப்பிலேயே நாற்காலியில் சாய்ந்து கொண்டு, ஆசிரியர் செல்போனில் பேசிக்கொண்டிருக்க, பள்ளி மாணவிகள் 2 பேர், ஆசிரியையின் கால்களுக்கு மசாஜ் செய்கிறார்கள்..
இதனை அதே பள்ளியில் யாரோ செல்போனில் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர்.. பாடம் சொல்லித் தரும் நேரத்தில் இந்த காரியத்தை செய்ய சொல்லி உள்ளார்..
பள்ளியில் ஆசிரியை செய்யும் இந்த காரியத்தை கண்டு அனைவருமே அதிர்ச்சியடைந்தனர்.. இதைப் பார்த்த பெற்றோர்களும் ஆசிரியையின் செயலை கண்டிக்க துவங்கினர்.
முழங்கால் வலிக்குது சார்
கடந்த 2 நாட்களாகவே இந்த வீடியோ வைரலானதையடுத்து, ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமையின் அதிகாரி ஜெகன்னாத் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்... சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் விளக்கமும் கேட்டார்.
அதற்கு அந்த ஆசிரியை, தனக்கு முழங்கால் வலி இருப்பதாகவும், அந்த நேரத்தில் அதிகமான வலி இருந்ததால்தான், மாணவர்கள் உதவியதாகவும் கூறினார்.. ஆனால், ஆசிரியையின் இந்த விளக்கத்தை ஏற்காத அதிகாரி ஜெகன்னாத் , சுஜாதா மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.. இந்த விசாரணை முடியும் வரை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவிகளுக்கு கல்வி அளிக்க கூடிய இடத்தில் நடந்த இதுபோன்ற சம்பவம் ஏற்று கொள்ள முடியத ஒன்று என கூறிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து உள்ளனர்.
காரை கழுவிய மாணவர்கள்
இப்படித்தான் கடந்த பிப்ரவரி மாதமும் இதே ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. அங்குள்ள அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர், தன்னுடைய காரை கழுவும்படி மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.. இதுபோல தனிப்பட்ட வேலைகளை செய்யுமாறு மாணவர்களை வற்புறுத்தி வந்துள்ளார்.. இந்த விஷயமும் மேலிடம் வரை புகாராக சென்று, அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
கல்வி உரிமை விதிமுறை மீறல்
மாணவர்களிடம் இத்தகைய வேலைகளை வாங்குவது கல்வி உரிமை விதிமுறைகளை மீறுவதாகும் என்று கல்வித்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தபோதிலும் சில ஆசிரியர், ஆசிரியைகள் தங்களது பொறுப்பு, கடமைகளை மறந்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது பெற்றோர்களை கவலைக்கும், வருத்தத்துக்கும் ஆளாக்கி வருகிறது.
தற்போது நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்து போனில் பேசி கொண்டிருக்கும் சுஜாதாவின் வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications