Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு கைகொடுக்கும் சுக்கிரன், குரு.. திடீர் அதிர்ஷ்டம் வரப்போகுது
Thulam Rasi Palan: மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசியினருக்கு பாக்கியத்தில் இருக்கும் சுக்கிரன், குரு நிறைய அதிர்ஷ்டங்களைக் கொடுப்பார். பயணம், சந்தோஷம் ஏற்படும். அஷ்டமத்தில் இந்த இணைவு இருப்பதால் கண்டிப்பாக வண்டி, வாகனங்களில் கவனமாக இருக்க வேண்டும். காரின் முன்பகுதி, பின்பகுதியில் அடிபடுவதற்கான வாய்ப்புள்ளது. நீங்களே நன்றாக சென்றாலும் அடிபடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.
சிக்கல் தீரும்
யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட ஏற்றங்கள் ஏற்படும். சுபகாரியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகளின படிப்பு, உத்தியோகம், தொழில் வியாபாரத்தில் பெரிய நம்பிக்கையும், பெரும் சந்தோஷமும் ஏற்படும்.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தனிப்பட்ட முறையில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவது ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். வாகனங்களில் செல்லும்போது உரிய விதிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது.
ஆரோக்கியம்
மூட்டுவலி, பின்பகுதி, நரம்பு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆட்சி பெற்ற செவ்வாய் பலம் இருப்பதால் நிறைய விஷயங்களை சாதிக்கக்கூடிய திறமை இருக்கும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். எந்தப் பகையாக இருந்தாலும் உடைக்கும் தன்மை உண்டு. 22, 23 சாதகமான நாட்களாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது யாரிடமும் சொல்லாமல் இருப்பது நல்லது. உக்கிர நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். நரசிம்மர் காயத்ரியை சொல்லி வருவது ஏற்றத்தைத் தரும்.
-
ஜூன் மாத ராசிபலன் 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தரும் மாதமா? -
ஆனி மாத பலன்: ராஜயோகத்தைப் பெறும் மேஷம் ராசி.. இந்த மாதத்தை தவற விட்டுடாதீங்க -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications