‛பார்ட்டியில்’ போதை.. ஐடி நிறுவன பெண் மேனேஜரை ஓடும் காரில் கூட்டு பலாத்காரம் செய்த சிஇஓ.. ஷாக்
ஜெய்ப்பூர்: ‛பார்ட்டி'யில் மயக்க நிலைக்கு சென்ற ஐடி நிறுவனத்தின் பெண் மேனேஜரை வீட்டில் ‛டிராப்' செய்வதாக கூறி நிறுவனத்தின் சிஇஓ உள்பட 2 பேர் ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்துக்கு நிறுவனத்தில் செயல் அதிகாரியாக இருக்கும் பெண் உடந்தையாக இருந்த நிலையில் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓவுக்கு சமீபத்தில் பிறந்தநாள் வந்தது. இதையடுத்து நிறுவன ஊழியருக்கு உதய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் கடந்த 20ம் தேதி இரவு அவர் பார்ட்டி வைத்தார். இதில் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

பெண் மேனேஜர் ஒருவரும் பார்ட்டியில் பங்கேற்றார். உணவு மட்டுமின்றி மதுபானம் உள்ளிட்டவையும் பரிமாறப்பட்டது. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் இரவு 9 மணிக்கு தொடங்கிய பார்ட்டி நள்ளிரவு 1.30 மணி வரை சென்றது.
அதன்பிறகு ஊழியர்கள் அனைவரும் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது பெண் மேனேஜர் மயக்க நிலையில் இருந்தார். அவரால் நடக்க கூட முடியவில்லை. இதையடுத்து நிறுவனத்தில் செயல் அதிகாரியாக இருக்கும் பெண், பெண் மேனேஜருக்கு தனது காரில் ‛லிப்ட்' கொடுத்து ‛டிராப்' செய்வதாக கூறினார்.
இதை நம்பிய பெண் மேனேஜர் அவரது காரில் நம்பி ஏறினார். அப்போது காரில் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் அந்த செயல் அதிகாரியின் கணவர் ஆகியோர் இருந்தனர். பெண் செயல் அதிகாரி காரை ஓட்டினார். மயக்க நிலையில் இருந்த பெண் மேனேஜருக்கு சிஇஓ மற்றும் பெண் செயல் அதிகாரியின் கணவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
நேரடியாக பெண் மேனேஜரை அவரது வீட்டுக்கு அவர்கள் அழைத்து செல்லவில்லை. பாதி வழியில் காரை நிறுத்தி சிகரெட் போன்று ஒன்றை வாங்கி பெண் மேனேஜருக்கு கொடுத்துள்ளனர். அதனை பயன்படுத்திய உடன் பெண் மேனேஜர் இன்னும் ஆழ்ந்த மயக்கத்துக்கு சென்றுள்ளார். இதனை பயன்படுத்தி கொண்டு அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பிறகு அதிகாலை 5 மணிக்கு தான் அவரை வீட்டில் ‛டிராப்' செய்துவிட்டு சென்றுள்ளனர்.
மறுநாள் மயக்கம் தெளிந்த பின் தான் பெண் மேனேஜர் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதுமட்டுமின்றி காரின் டேஷ் கேமராவில் சிஇஓ மற்றும் நிறுவன செயல் அதிகாரியின் கணவர் ஆகியோர் சேர்ந்து பலாத்காரம் செய்த வீடியோ பதிவாகி இருந்ததையும் உறுதி செய்து கொண்டார்.
இதையடுத்து அந்த பெண் மேனேஜர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் ஐடி நிறுவனத்தின் சிஇஓ, செயல் அதிகாரி மற்றும் உடந்தையாக இருந்த பெண் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications