Advertisement

உலகிற்கே மருந்து அனுப்பிய கியூபாவில்.. 2 வயது குழந்தைகளுக்கும் கொரோனா வேக்சின் செலுத்தி சாதனை.. செம


ஹவானா: கியூபாவில் இரண்டு வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா வேக்சின் கொடுத்து கியூப அரசு சாதனை படைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவிய தொடக்க காலத்தில் அதை சிறப்பாக எதிர்கொண்ட நாடுகளில் வியட்னாம் மற்றும் கியூபா ஆகியவை முக்கியமான நாடுகள். இரண்டு கம்யூனிச நாடுகளும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதோடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்தது. முக்கியமாக கியூபா போன்ற நாடுகள் உலகம் முழுக்க பல ஏழை நாடுகளுக்கு மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் அனுப்பியது.

இன்ஸ்டாகிராம் மூலம்.. 7 மில்லியன் டாலர் திரட்டி.. ஆப்கான் மக்களுக்கு உதவி புரிந்த மீம்ஸ் கிரியேட்டர்

சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கும் கியூபா தங்கள் நாட்டு மக்களுக்கு கடந்த 10 மாதங்களாக வேக்சின் செலுத்தி வருகிறது. உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அப்டாலா, சேபேரானா 02 உள்ளிட்ட வேக்சின்களை கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. கியூபாவின் இந்த இரண்டு உள்நாட்டு வேக்சின்களுக்கும் இன்னும் உலக சுகாதார மையம் அனுமதி அளிக்கவில்லை.

வேக்சின்

அப்டாலா வேக்சின் என்பது மூன்று டோஸ் வேக்சின் ஆகும். இந்த மூன்று டோஸ் வேக்சின் 92.28% தடுப்பு திறன் கொண்டது என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் சேபேரானா வேக்சின் இரண்டு டோஸ் மற்றும் ஒரு பூஸ்டர் கொண்ட வேக்சின் ஆகும். இந்த வேக்சின் 91.2 சதவிகித தடுப்பு திறன் கொண்டது ஆகும். இதைத்தான் அங்கு 18+ வயது கொண்டவர்களுக்கு கியூபா பயன்படுத்தி வருகிறது.

Advertisement
Advertisement
கியூபா

இந்த வேக்சினை குழந்தைகளிடம் சோதனை செய்து வந்த கியூபா கடந்த வெள்ளிக்கிழமை 12 வயது முதலான குழந்தைகளுக்கும் இந்த இரண்டு வேக்சினையும் கொடுக்க தொடங்கியது. 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு வேகமாக வேக்சின் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சோதனைகளில் பெரிய அளவில் பின் விளைவுகள் இல்லாத நிலையில் குழந்தைகளுக்கு வேக்சின் கொடுக்கும் முடிவில் கியூபா வேகம் காட்டி வருகிறது.

Advertisement
Vaccine ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது | Dr. E Theranirajan explain | Oneindia Tamil
நேற்று காலை

இந்த நிலையில்தான் கியூபா அரசு 2-11 வயது கொண்ட குழந்தைகளுக்கும் வேக்சின் போட தொடங்கி உள்ளது. நேற்று காலையில் இருந்து 2 வயது குழந்தைகளுக்கு வேக்சின் போடப்பட்டு வருகிறது. அப்டாலா, சேபேரானா ஆகிய 2 வேக்சின்கள் குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகிறது. உலகில் சீனா உள்ளிட்ட நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு வேக்சின் போடப்பட்டு வருகிறது. கியூபாவில்தான் முதல் நாடாக 2 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேக்சின் போடப்படுகிறது.

அனுமதி அளிக்கப்படவில்லை

ஆனால் கியூபாவின் இந்த அப்டாலா, சேபேரானா ஆகிய இரண்டு வேக்சின்களும் உலக சுகாதார மையத்தால் அனுமதிக்கப்படவில்லை. அங்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் தற்போது கியூபா குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேக்சின் போட்டு வருகிறது. அப்டாலா வேக்சின் என்பது டிஎன்ஏ புரோட்டின் வகை வேக்சின் ஆகும்.

டிஎன்ஏ வேக்சின்

கொரோனாவின் புரோட்டின் ஸ்பைக்குகளை மட்டும் கொல்லப்பட்ட வைரஸில் மாற்றி அதன்மூலம் அப்டாலா வேக்சின் தயாரித்துள்ளனர். சேபேரானா வேக்சின் என்பது ஒரே வேக்சினில் இரண்டு ஆண்டிஜென்களை வைத்து உருவாக்கப்பட்ட டிஎன்ஏவகை வேக்சின் ஆகும். இரண்டும் பெரிய அளவில் குளிரான வெப்பநிலையில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இரண்டுமே அதிக எதிர்ப்பு திறன் கொண்டது என்பதால் தற்போது குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு ஒன்இந்தியா தமிழ் டெலிகிராம் சானல்

English Summary

Cuba started vaccinating 2 years old toddlers as the schools are going to re-open. The Abdala and Soberana vaccines are being given to children.
Read more...