"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி!
தெஹ்ரான்: ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே தான் மத்தியஸ்தம் செய்வதாகப் பாகிஸ்தான் கூறி வருகிறது. இதற்கிடையே ஈரான் மீது பாகிஸ்தான் கடும் அதிருப்தியில் உள்ளதாக உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றிய பாகிஸ்தானின் அண்மைக்கால நடவடிக்கைகளே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் இரட்டை கேம் ஆடுவதாக ஈரான் சந்தேகிக்கிறது.
மத்திய கிழக்கு மோதல் 4வது வாரமாகத் தொடரும் சூழலில் அதை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா ஒரு வாரம் வரை தாக்குதலை நிறுத்த போவதாக ஏற்கனவே சொல்லிவிட்டது. இதுவரை ஈரான் இறங்கி வரவில்லை. இருப்பினும், போரை முடிவுக்குக் கொண்டு வர இதர நாடுகளும் பேச்சுவார்த்தைகளுக்கு முயன்று வருகின்றன.

பாகிஸ்தான்
இந்த மோதலில் தான் மத்தியஸ்தம் செய்வதாகப் பாகிஸ்தான் கூறிக் கொள்கிறது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் கொடுத்த 15 கண்டிஷன்களை பாகிஸ்தானே ஈரான் வசம் கொடுத்தாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே ஈரான் மீது பாகிஸ்தான் கடும் அதிருப்தியில் உள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அதாவது ஹார்முஸை சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் பாகிஸ்தான் டபுள் கேம் ஆடுவதாக ஈரான் சந்தேகிக்கிறது.
ஹார்முஸ்
அதாவது ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கிய சூழலில், சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த கப்பல்களை மட்டுமே ஈரான் அனுமதித்தது. அதன்படி பாகிஸ்தானைச் சேர்ந்த கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்தது. ஈரானின் இந்த நடவடிக்கையால் மட்டுமே சுமார் 10 பாகிஸ்தான் கொடியிட்ட எண்ணெய் கப்பல்கள் இந்த வழியாகச் சென்றன. ஆனால், இந்த விவகாரத்தையே இப்போது அமெரிக்கா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. அதாவது போர் நிறுத்தம் குறித்துப் பேசிய டிரம்ப், ஈரான் இதன் கரணமாகவே 10 அமெரிக்க ஆதரவு கப்பல்களுக்கு ஹார்முஸில் வழிவிட்டதாகக் கூறியிருந்தார்.
இது ஈரானுக்கு மிகக் கடுமையாகக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கிட்டத்தட்ட ரெட் லைனை தாண்டியதாகவே ஈரான் கருதுகிறது. நல்லெண்ண நடவடிக்கையாகப் பாகிஸ்தான் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அதை இப்போது அமெரிக்கா தனக்குச் சாதகமாக மறைமுகமாகப் பயன்படுத்த முயல்கிறது. ஒரு முஸ்லிம் நாடான பாகிஸ்தான் செய்துள்ள இந்த நடவடிக்கை, தங்களுக்குத் துரோகம் இழைத்தது போல உணர்வைத் தருவதாக ஈரான் சொல்கிறது.
கடும் கோபம்
அதே நேரத்தில், பாகிஸ்தான் தன்னை ஒரு மத்தியஸ்தராகத் தீவிரமாக முன்னிறுத்தி வருகிறது. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரானிடம் கொடுத்தாக பாகிஸ்தானே கூறிக் கொண்டது. ஆனால், இதை ஈரான் பகிரங்கமாக நிராகரித்தது. பேச்சுவார்த்தைகளை மறுத்த ஈரான், பாகிஸ்தானின் இந்த முயற்சிகளை அமெரிக்க ஆதரவு நடவடிக்கையாகவே பார்க்கிறது.
டபுள் கேம்
குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த விஷயத்தைப் பாகிஸ்தானின் டபுள் கேமாகவே ஈரான் பார்க்கிறது. அமெரிக்காவுக்கு உதவவே இதுபோல பாகிஸ்தான் செய்து இருக்கிறது என்றும் இனியும் அவர்கள் நடுநிலை எனக் கருதக் கூடாது என்றும் குரல்கள் எழுந்துள்ளன. எந்தத் தரப்புக்கும் முழுமையாக உறுதியளிக்காமல் இருதரப்பிலிருந்தும் ஆதாயங்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது என்று ஈரான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் ஈரானின் பிரதான எதிராக இருக்கும் சவுதி அரேபியாவுடன் இணைந்து பாகிஸ்தான் செயல்படுகிறது. ஆனால், அதையும் தாண்டி பாகிஸ்தானுக்கு ஈரான் ஹார்முஸ் விவகாரத்தில் உதவியது. இந்த நேரத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் பாகிஸ்தான் மீதான ஈரானின் கோபத்தைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications