ஹார்முஸ்-ஐ கண்ட்ரோலில் எடுக்கும் ஈரான்.. ரெடியாகும் அமெரிக்க படை, போர் துவங்குகிறதா?

Subscribe to Oneindia Tamil

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தனது கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஈரான் போரில் மையப்புள்ளியாக இருப்பதே இந்த ஹார்முஸ் தான்.

இந்த நிலையில் ஈரான் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் புதிய சட்டத்தின் படி, இந்த நீரிணையை தேசிய ராணுவத்தின் (National Army) கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Iran war trump Strait of Hormuz Iran Control Iran Army Hormuz Law Hormuz Shipping Crisis US Iran Tensions 2026 Iran Blocks Hostile Vessels Iran Strait of Hormuz army control proposed law Hormuz Iran Iran blocks hostile vessels Hormuz shipping traffic drop only 7 ships in Hormuz US Iran stalled talks CENTCOM forces ready Middle East Trump cancels envoy trip Pakistan Iran rial profits Hormuz Strait of Hormuz crisis 2026 reduced oil tanker traffic Hormuz Ebrahim Azizi Hormuz statement Iran army authority Hormuz global oil route disruption Hormuz chokepoint tension 7 2026

தற்போது ஈரான் ராணுவம் ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் புதிய சட்டம் மூலம் இந்த அதிகாரத்தை அதிகாரப்பூர்வமாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் வலுப்படுத்தும்.

மேலும், hostile vessels அதாவது எதிரி நாடுகள் என்று ஈரான் அறிவிக்கும் நாடுகளின் கப்பல்களின் இயக்கத்தை இப்பாதையில் மொத்தமாக கட்டுப்படுத்தும் வகையிலான அதிகாரத்தையும் ஈரான் ராணுவும் முழுமையாக இந்தச் சட்டத்தின் மூலம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கத்திய நாடுகளுடனான பதற்றத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பல் போக்குவரத்து

ஈரான் போரால் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் ஏற்கெனவே கப்பல் போக்குவரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 7 கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்றுள்ளன.

போர் தொடங்கும் முன்பு தினமும் சராசரியாக 140 கப்பல்கள் இந்தப் பாதையில் சென்று வந்தன. இந்த எண்ணிக்கை மொத்தமாக குறைந்து தினமும் 10-15 கப்பல்கள் மட்டுமே பல்வேறு கட்ட விளக்கம், அனுமதிக்கு பின்பு செல்கிறது.

தற்போது இப்பாதையில் செல்லும் பெரும்பாலான கப்பல்கள் உலர் சரக்கு (dry bulk) வகையைச் சேர்ந்தவை. எண்ணெய் டேங்கர்களின் நடமாட்டம் மிகவும் குறைந்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை உலக எண்ணெய் வர்த்தகத்தின் மிக முக்கியமான கழுத்து chokepoint ஆகும். வளைகுடா நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 90 சதவீத எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே உலகம் முழுவதும் செல்கிறது. இங்கு ஏற்படும் சிறிய தடையும் உலகளாவிய எண்ணெய் விலையை உயர்த்தும். இதனால் போக்குவரத்து செலவு, பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகள் உலகம் முழுவதும் ஏற்படும்.

ஈரான் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம் ஈரான் ராணுவம் புதிய பலத்தை பெறுகிறது, ஹார்முஸ் நீரிணை தொடர்பான பொருளாதார நடவடிக்கைகளால் கிடைக்கும் வருவாயை ஈரான் ரியால் நாணயத்திலேயே கணக்கிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஈரான் நாணய பயன்பாட்டை சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் ஒரு முயற்சி.

அமெரிக்க படை

ஈரான் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு மத்தியில் அமெகிக்காவின் Central Command (CENTCOM) தகவலின்படி, மேற்கு ஆசியப் பகுதியில் அமெரிக்க படைகள் தொடர்ந்து "எச்சரிக்கையுடனும் மற்றும் தயார் நிலையிலும்" உள்ளன என தெரிவித்துள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் தற்போது முடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என CENTCOM தெரிவித்துள்ளது.

ஈரான் புது சட்டம், CENTCOM ரிப்போர்ட் ஆகியவை ஒரேநேரத்தில் வந்துள்ள காரணத்தால் மீண்டும் போர் உருவாகும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+