துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த சில காலமாகவே முக்கிய தீவிரவாதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாகிர் அன்வர் பாகிஸ்தானில் அதேபோல மர்ம மரணமடைந்துள்ளார். இது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியா மீதான தீவிரவாத செயல்களுக்குப் பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்தியாவும் உலக நாடுகளும் பல முறை எச்சரித்தும் கூட எல்லை தாண்டிய தீவிரவாதத்தைப் பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. இது தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கிடையே கடந்த சில காலமாகவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.

மசூத் அசார் சகோதரர் மரணம்
இந்தச் சூழலில் தான் ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாகிர் அன்வர் பாகிஸ்தானில் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அவர் எப்படி உயிரிழந்தார்.. இதற்குப் பின்னணியில் யார் என இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
முகமது தாகிர் அன்வர் மரணத்தை ஜெய்ஷ் அமைப்பின் அதிகாரப்பூர்வ சேனல் உறுதி செய்துள்ளது. திங்கட்கிழமை இரவு பகவல்பூரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் உஸ்மான் வாலி மசூதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றதாகவும் கூறப்பட்டு இருந்தது. தாஹிர் அன்வரின் மரண காரணம் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
துரந்தர் சம்பவம்?
இணையத்திலும் அன்வர் மரணம் பேசுபொருளாக மாறியுள்ளது. மர்மமான முறையில் தாகிர் உயிரிழந்த சூழலில், நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். சிலர் துரந்தர் படத்தையும் ஒப்பிட்டு வருகிறார்கள். அதேநேரம் இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ஷ் இ முகமது
ஜெய்ஷ் இ முகமது என்பது ஒரு சிறிய தீவிரவாத அமைப்பு இல்லை. அது பல ஆண்டுகளாகவே பாகிஸ்தானில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் மிகப் பெரிய தீவிரவாத இயக்கமாகும்.. 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 2016 பதான்கோட் விமானத்தளம், 19 வீரர்கள் உயிரிழந்த உரி தாக்குதல் மற்றும் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியான 2019 புல்வாமா தாக்குதல்கள் என இந்தியாவின் பல முக்கிய பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் இந்த அமைப்பு தான் இருந்தது.
இதனால் ஜெய்ஷ் தீவிரவாதிகளையும் அவர்களின் முகாம்களையும் குறிவைத்து இந்தியா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்தாண்டு பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில் ஜெய்ஷ் பகவல்பூர் தலைமையகம் தாக்கி அழிக்கப்பட்டது. அதில் அசாரின் பல உறவினர்கள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூரில்ஜெய்ஷ் அமைப்பின் ஜாமியா மஸ்ஜித் சுபான் அல்லாஹ் வளாகம் உள்படப் பல பயங்கரவாத தளங்கள் சேதமடைந்தன.. அசாரின் சகோதரி உட்பட சுமார் 10 உறவினர்களும், பல உதவியாளர்களும் இத்தாக்குதல்களில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மர்ம மரணம் அடைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள்
- லஷ்கர்-இ-தைபா தீவிரவாதி அபு கட்டல்- மார்ச் 2025
- முஃப்தி அப்துல் பாகி நூர்சாய் -மார்ச் 2025
- 2016 சிஆர்பிஎஃப் கான்வாய் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி அத்னான் அகமது -டிசம்பர் 2023
- பதான்கோட் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் ஷாஹித் லத்தீஃப் -அக்டோபர் 2023
- லஷ்கர்-இ-தைபா தீவிரவாதி ஜியாவுர் ரஹ்மான் - செப்டம்பர் 2023
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அபு காசிம் காஷ்மீரி - செப்டம்பர் 2023
- முன்னாள் அல்-பத்ர் முஜாஹிதீன் தளபதி சையத் காலித் ராசா -பிப்ரவரி 2023
- ராவல்பிண்டியின் முக்கிய ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி பஷீர் அகமது பீர்- பிப்ரவரி 2023
- கந்தகர் விமான கடத்தல்காரன் ஜாஹூர் மிஸ்திரி- மார்ச் 2022












Click it and Unblock the Notifications