தமிழ்நாடு தேர்தல் முடிவுகளை அமெரிக்காவே எதிர்பார்க்குது.. டெக்சாஸில் ஸ்பெஷல் ஏற்பாடு!

Subscribe to Oneindia Tamil

டெக்சாஸ்: தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிறப்பு நேரடி திரையிடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு டெக்சாஸ் தமிழ் சங்கம் சார்பில், தமிழக தேர்தல் முடிவுகளை பார்க்கும் வகையில் வாட்ச் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இத்தேர்தலில் 85.10% வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் நாளை (மே 4 ஆம் தேதி) எண்ணப்பட்ட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tamil Nadu Election Results Spark Global Interest Watch Party in US Texas

தமிழ்நாடு முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடைபெறும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். முன்னிலை நிலவரம் ஒவ்வொரு சுற்றிலும் அறிவிக்கப்படும். மதியத்திற்குள் அதிகப்படியான சுற்றுகள் முடிவடைந்திருக்கும் என்பதால், வெற்றி யாருக்கு என்பது தெளிவாக தெரிந்துவிடும். மாலைக்குள் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியாளர் யார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிடும்.

2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. அதிமுக கூட்டணி 75 இடங்களைப் பெற்றது. தற்போதைய 2026 தேர்தலில் திமுக, அதிமுக,தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான எக்சிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் திமுக தலைமையிலான கூட்டணி தான் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளன. சில கணிப்புகள் அதிமுக கூட்டணி ஆட்சியமைக்கும் எனவும் தெரிவித்தன. ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் தவெக ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்தது. பொதுவாக, கணிப்பகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், தமிழக அரசியலில் ஒரு மும்முனைப் போட்டி நிலவுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகளை தமிழக வாக்காளர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடு வாழ் தமிழர்களும் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் தமிழ் சங்கம் சார்பில், தமிழக தேர்தல் முடிவுகளை பார்க்கும் வகையில் வாட்ச் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நேரப்படி, மே 3 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 1 மணி வரை தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் நேரடி திரையிடல் கொண்டாட்டம் நடைபெறுகிறது. டெக்சாசில் அமைந்துள்ள குப்பண்ணா உணவகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சைவ / அசைவ பஃபே உணவுடன் சேர்த்து டிக்கெட் கட்டணமாக 20 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு வருமாறு:

மக்களாட்சி திருவிழா - தமிழ்நாடு தேர்தல் முடிவுகளை கண்டுகளிப்போம் - Tamil Nadu Election Results - Watch Party

*அனைவரும் வருக. ஜனநாயக திருவிழாவை ஒன்றாக கொண்டாடுவோம். !*

*WHAT:* 2026 Tamil Nadu Election Results - Watch Party
*WHERE:* Kuppanna Little Elm - 2401 Little Elm Pkwy Suite 100, Little Elm, TX 75068
*WHEN:* May 3rd, 2026 - Sunday Between 9 pm and1 am.
*Registration & RSVP முன்பதிவு:* https://northtexastamil.org/event-rsvp-registration/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+