பாகிஸ்தான் சொன்ன வார்த்தைக்காக மொத்தத்தையும் கைவிட்ட டிரம்ப்.. ஈரான் விவகாரத்தில் புது ட்விஸ்ட்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கிய வணிகக் கப்பல்களை பாதுகாப்பாக வழிநடத்தி வெளியேற்றும் 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்' என்ற ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக அமைதிக்கு திரும்பிய வளைகுடா பகுதி டிரம்ப்-ன் ப்ராஜெக்ட் ஃப்ரீடம் மூலம் மீண்டும் டிரோன் சத்தம், குண்டு வெடிப்பு சத்தம் உடன் பீதியில் மூழ்கியது. விமான சேவைகளும் முடக்கப்பட்டது. இதனால் மீண்டும் வளைகுடா நாடுகளில் கடந்த 2 நாட்களாக பதற்றம் அதிகரித்த நிலையில் பாகிஸ்தான் தலையீட்டின் காரணமாக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு ப்ராஜெக்ட் ஃப்ரீடம் திட்டத்தை கைவிட்டுள்ளது.

இந்த முடிவின் மூலம் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் காண வழிப்பிறந்துள்ளது. உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் குறைய வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம், ஆனால் ஈரான் தாக்குதலால் பதற்றம் அதிகமானது.
ப்ராஜெக்ட் ஃப்ரீடம் என்றால் என்ன?
இந்தத் திட்டம் மூலம் பெர்சியன் வளைகுடாவில் வணிகக் கப்பல்களை ஈரானியத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கவும், அவற்றை பாதுகாப்பாக வழிநடத்தவும் அமெரிக்க ராணுவம் தொடங்கியது. உலகின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதி இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுவதால், இந்தப் பாதையில் ஏற்படும் இடையூறும் உலக எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது.
ப்ராஜெக்ட் ஃப்ரீடம் திட்டம் மூலம் கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 12.33 சதவீதம் குறைந்து 89.66 டாலராக குறைந்தது. இதுவே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 10.68 சதவீதம் குறைந்து 98.14 டாலராக குறைந்துள்ளது.
ப்ராஜெக்ட் ஃப்ரீடம் நிறுத்தம் மூலம் ஈரானுடன் "முழுமையான மற்றும் இறுதி ஒப்பந்தம்" எட்டும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். பாகிஸ்தான் கோரிக்கையின் பெயரில் நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தை துவங்கியிருக்கும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை குறைய துவங்கியுள்ளது.
தடை இன்னும் தொடர்கிறது
'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்' நிறுத்தப்பட்டாலும், ஈரானிய துறைமுகங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள கடற்படை வாயிலான முடக்கம் இன்னும் அமலில் உள்ளது. இதனால் ஈரானுக்கு பொருளாதார அழுத்தம் தொடர்கிறது. அதே நேரத்தில் 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' என்ற பெரிய அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இருப்பினும் மத்தியக் கிழக்குப் பகுதியில் முழுமையான அமைதி இன்னும் திரும்பவில்லை.
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்
அமெரிக்க ப்ராஜெக்ட் ஃப்ரீடம் திட்டத்தை செயல்படுத்திய 36 மணிநேரத்தில் அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது, இதேபோல் வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.
ஈரானின் புரட்சிக் காவல்படை, கப்பல்கள் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வானில் தடுத்து திருப்பி தாக்குதல் நடத்தியது.












Click it and Unblock the Notifications