விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவேன்! ஜெயிலர் 3-ல் நான்தான் மூர்த்தி அண்ணன்! வாட்டர் மெலன் திவாகர்

  • மதுரை: அரசியலுக்கு வருமாறு முதல்வர் விஜய் அழைத்தால் வருவேன், மற்றபடி நானாக வரமாட்டேன் என வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயிலர் 3-ஆம் பாகம் எடுத்தால் அதில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நான் நடித்தால் வசூல் அதிகரிக்கும் என நண்பர்கள் தெரிவிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

    Advertisement

    மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். இவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    Advertisement

    பட்டாக்கத்தி ரீல்ஸ் மோகம் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியிலும் அதிகமாக பரவி வருகிறது. இது ஆபத்தானது. அதேபோல பழிக்குப் பழி என்கிற போஸ்டர்களும் தற்போது அதிகரித்து வருகிறது.

    இதன் மூலம் இளைஞர்களும், மாணவர்களும் சீரழியும் நிலை ஏற்படுகிறது. நேற்றைய தினம் கூட சிவகங்கை மாவட்டத்தில் சுள்ளான் மதன் என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

    பழிக்கு பழி வேண்டாம்

    அதற்கு அவரது நண்பர்கள் பழிக்குப் பழி என்கிற போஸ்டர்கள் ரிலீசாகி தற்போது வெளியாகி இருக்கிறது. அது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர இது போன்ற பழிக்கு பழி கொலைகள் இனி வேண்டாம்.

    Advertisement

    இதற்கு தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை நல்லொழுக்க வகுப்புகள் நடத்தி அவர்களது வாழ்க்கை பாதையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சரிந்து விழுந்தது போல் நடிப்பு

    மேலும் கொலை சம்பவங்கள் குறித்தும் கொலையானவர்கள் படும் வேதனை குறித்தும், கொலையானவர்கள் சரிந்து தரையில் விழுந்து இறந்தது போல நடித்துக் காட்டினார்.

    அதே போல "இன்ஸ்டாவில் பிரபலமானவர்கள் தங்களுக்கு பரிசு பொருட்கள் அனுப்புங்கள் என்று யாரிடமும் கேட்கக் கூடாது. அது போன்று கேட்பது என்பது மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

    Advertisement

    ஜெயிலர் 2

    நிறைய படங்களில் கமிட்டானதால் முன்பு போல் வீடியோ போட முடியவில்லை. ஜெயிலர் 2 படம் பார்க்க தியேட்டர் போனேன். அங்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் என்னை பார்த்து வாட்டர்மெலன் ஸ்டார் என கத்தி, என்னுடன் செல்பி எடுத்துக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.

    ஜெயிலர் 2 படத்தில் பறந்து சண்டை போட்ட இந்த 3 பெண்கள் யார் தெரியுமா? ரஜினியுடன் கலக்கல்

    ஜெயிலர் 3

    ஜெயிலர் 3 படம் எடுத்தால் அதில் மூர்த்தி கதாபாத்திரத்தில் திவாகரை போடலாம் என நண்பர்கள் கூறுகிறார்கள். ஜெயிலர் 2-வில் ரஜினி சார் பழக்கடை முன்பு நிற்கும் சீனில் நான் வாட்டர்மெலனை வைத்துக் கொண்டு நின்றால் அட்டகாசமாக இருக்கும் என மக்கள் சொல்கிறார்கள். மேலும் நான் நடித்தால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்கிறார்கள். இதெல்லாம் மக்கள் யூகிக்கும் விஷயங்கள், என்னுடைய கருத்து அல்ல. விரைவில் பெரிய பெரிய ஸ்டார்களுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்.

    Advertisement

    அரசியலுக்கு வர ஆர்வம் இல்லை

    எனக்கு அரசியலுக்கு வர ஆர்வம் இல்லை. விஜய் சார் நிறைய படங்களில் நடித்து அரசியலுக்கு போய் முதல்வராகிவிட்டார். தனுஷ் சாரும் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். நான் இப்போதுதான் படங்களில் கமிட்டாகியுள்ளேன்.

    வாட்டர் மெலன் ஸ்டாருக்கு டப் கொடுக்கும் முனியம்மா.. காரி துப்பி, அசிங்கமா நடக்க காரணம் இதுதானா?

    நிறைய படங்கள்

    எனவே நிறைய படங்களில் நடித்த பிறகு அரசியலில் ஆர்வம் இருந்தால் செல்வேன். அதற்கு முன்னர் நான் அரசியலுக்கு வர வேண்டும் என முதல்வர் விஜய் என்னை அழைத்தால் நான் செல்வேன். ஹீரோவாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளேன், பூஜை போட்டதும் அறிவிப்பேன்". என்றார்.

    English Summary

    Watermelon Star Diwakar says that if CM Vijay invites him, he will enter into politics. Otherwise he will concentrate in acting.