CSK: மொத்தமாக சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. தோனியை இறங்க சொல்லுங்க.. கொதிக்கும் ரசிகர்கள்!
சென்னை: சென்னை சூப்பர் கிங்க் அணி இன்று சொந்த மண்ணில் விளையாடியும் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த போட்டியில் மும்பையை 103 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை அணி இந்த போட்டியில் அப்படியே சொதப்பியுள்ளது. தோனியை மீண்டும் அணிக்கு கொண்டு வந்தால்தான் கோப்பை வெல்வதை பற்றி நினைத்து பார்க்கலாம்.. இல்லை என்றால் பிளே ஆஃப் போவது கூட கஷ்டம்தான் என்று சிஎஸ்கே ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றதால் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 3 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டி என்பதால் மும்பையை வீழ்த்தியது போல இன்றைய போட்டியிலும் எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. எனினும், அடுத்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி விக்கெட்டுகள் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. சென்னை அணி சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த போட்டியில் சென்னை அணியியின் தோல்விக்கான முக்கியமான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
40 ஓவர்களில் வெறும் 43 ரன்கள்
* சென்னை அணிக்கு பேட்டிங் இன்றைய போட்டியில் சிறப்பாக அமையவில்லை. கடந்த போட்டியில் கலக்கிய சஞ்சு சம்சன் 11 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து சொதப்பி வந்த ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் ரன் சேர்த்தாரே தவிர பந்துக்கு ஏற்ப ரன் அடிக்கவில்லை. கிட்டத்தட்ட 10 ஓவர்கள் பிடித்தும் ரன் ரேட் அதிகம் இல்லாமல் அதிரடியாக ஆடதது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.
விக்கெட் சரிந்துகொண்டே வந்ததால் நிதானமாக அவர் ஆடினாலும் அவருக்கு மறுமுனையில் கம்பெனி கொடுக்கவும் ஆள் இல்லை. இதனால், ரன் ரேட் மந்தமாக போனது.10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
* டேவெல்ட் பிரேவிஸ், சர்ப்ராஸ் கான் என எதிர்பார்த்த பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ரன் குவிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இறுதிகட்டத்தில் கெய்க்வாட் அதிரடி காட்டியதால் ஓரளவு கவுவரமான ஸ்கோரை சென்னை அணி எடுத்தது.
பவுலிங்கிலும் சொதப்பல்
* பேட்டிங்கில் சொதப்பியது என்றால் பந்து வீச்சிலும் சென்னை அணி சொதப்பியதை பார்க்க முடிந்தது. 158 ரன்களை டிஃபெண்ட் செய்ய வேண்டும் என்றால் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்து எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். ஆனால் இதனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் தவறினர்.
* பிட்ச்சின் தன்மையை நன்கு கணித்துக்கொண்ட குஜராத் அணியின் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் நிதனமாகவும் ஏதுவான பந்துகளை அடித்தும் பொறுப்பாக ஆடினர். முதல் விக்கெட்டை ஒருவழியாக நூர் அகமது பந்தில் சஞ்சு சாம்சன் ஸ்டம்பிங் எடுத்தார். ஆனால் அதற்கு பிறகு வந்த ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் சென்னை அணியின் பந்து வீச்சை சிதறடித்தார். இதனால், எளிதாக அந்த அணி வெற்றி பெற்றது.
தோனியை கொண்டு வாங்க
* சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலுமே இன்று பெரிய அளவில் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. 170 மற்றும் 180 ரன்கள் எடுத்து இருந்தால் இந்த பிட்ச்சில் சவால் கொடுத்து இருக்கலாம். ஆனால், பேட்டிங்கில் இதை செய்ய தவறிய சென்னை அணி, பந்து வீச்சிலும் நெருக்கடி கொடுக்க தவறிவிட்டது.
* கடந்த இரண்டு போட்டிகளாக வெற்றி பெற்று கம்பேக் கொடுத்த சென்னை அணி மீண்டும் தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தோனியை மீண்டும் அணிக்கு கொண்டு வந்தால்தான் கோப்பை வெல்வதை பற்றி நினைத்து பார்க்கலாம்.. இல்லை என்றால் பிளே ஆஃப் போவது கூட கஷ்டம்தான் என்று சிஎஸ்கே ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
காயத்தில் இருந்து குணம் அடைந்தாலும் தோனி, இன்னும் அணிக்கு விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தற்போது சென்னை அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருவதால் அவரை களமிறக்கினால், அனுபவம் கைகொடுக்கும் எனவும் சென்னை அணியால் வெற்றியை பெற முடியும் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications