நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: தப்பியது ரணிலின் பிரதமர் பதவி: ஆனால் கிளம்பியது புது பிரச்சினை
நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ரணில் விக்ரமசிங்க வெற்றி அடைந்தார்.
கொழும்பு: நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ரணில் விக்ரமசிங் வெற்றி பெற்றார். எனினும் அவரது கூட்டணி கட்சியை சேர்ந்த 13 எம்பிக்கள் ரணிலுக்கு எதிராக வாக்களித்தனர்.
விக்ரமசிங்கவின் கட்சி நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களை கொண்டுள்ள பெரிய கட்சியாகும். இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி கண்டது.
ஆளும்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய தேர்தல் முடிவுகளால் அதிருப்தியடைந்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவை பதவி விலகுமாறு கோரினார். ஆனால் சிறிசேனாவின் இந்த கோரிக்கையை ரணில் மறுத்துவிட்டார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்நிலையில் ஏற்கெனவே 2 முறை பிரதமராக இருந்த ராஜபக்சே, மீண்டும் பிரதமர் கனவில் அவருடைய இலங்கை மக்கள் முன்னணி கட்சியை தூண்டிவிட்டு ரணில் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த மாதம் கொண்டு வந்தார்.

வாக்கெடுப்பு
நிதி மோசடி மற்றும் இனக்கலவரத்தை அடக்க தவறியதாக ரணிலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்று விவாதத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிரதமருக்கு ஆதரவாக 122 வாக்குகள்
இதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. 55 எம்பிக்கள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 76 வாக்குகளும் , எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது.

13 எம்பிக்கள் எதிர்த்து வாக்கு
இதன் மூலம் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். இதனால் ரணிலின் பிரதமர் பதவி தப்பியது. எனினும் ரணிலின் கூட்டணி கட்சியை சேர்ந்த 13 எம்பிக்கள் ரணிலுக்கு எதிராக வாக்களித்ததை தொடர்ந்து அரசியல் ரீதியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications