'தமிழ்நாடு சிங்கப்பூராகும்' பிரசாந்த் ரங்கசாமி டிவீட்.. இன்று மாலை முதல் ஆரம்பம்.. விஜய் ரசிகர்கள் குத்தாட்டம்!

Subscribe to Oneindia Tamil

திரைப்பட விமர்சகரான பிரசாந்த் ரங்கசாமி, எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகும் சில நிமிடங்களுக்கு முன்பு தவெக தலைவரும், நடிகர் விஜய்யை ஆதரித்து டிவிட்டரில் (X) பதிவிட்டுள்ளார். 'ஒரு தலைமுறை மாற்றம் நடக்கப் போகிறது! இன்று மாலை அதன் தொடக்கம்! தமிழ்நாடு உண்மையிலேயே சிங்கப்பூராகும்!' என்று அவர் எழுதியுள்ள பதிவு சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

திரைப்பட விமர்சகராக புகழ்பெற்ற இட்ஸ் பிரசாந்த் என அழைக்கப்படும் பிரசாந்த் ரங்கசாமி, அரசியல் விவகாரங்களிலும் தனது கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இவருடைய கருத்துகளை சிலவற்றை மக்கள் கடுமையாக விமர்சித்தாலும், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

Vijay TVK DMK Tamil Nadu Assembly Election 2026 Tamil Nadu Election 2026 Prashanth Rangaswamy Tweet Vijay Support Tamil Nadu Singapore TVK Election Vijay Fans Reaction Prashanth Rangaswamy tweet Vijay Tamil Nadu will become Singapore generational change Tamil Nadu Prashanth Rangaswamy supports Vijay Nallathe Nadakkum tweet Vijay TVK election boost movie reviewer backs Vijay exit poll time viral tweet Tamil Nadu political change Vijay fan celebration Prashanth Rangaswamy viral post TVK strong showing prediction Vijay political journey Tamil Nadu development vision Vijay supporter tweet poll

இன்று ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், எக்ஸிட் போல் முடிவுகள் மாலை 6.30 மணிக்கு வெளியாக இருக்கும் சூழலில் பிரசாந்த் ரங்கசாமி வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பை அவரது ஆதாரவாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 'நல்லதே நடக்கும்' என்று முடித்துள்ள அவரது ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளையில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும் நடிகருமான விஜய், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தற்போது ஆன்மிகப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அதிகாலை விஜய் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றார். அங்கு அவர் கடலில் நீராடிவிட்டு, சுவாமி தரிசனம் செய்தார். திருச்செந்தூர் பயணத்தைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 29, 2026) விஜய் மகாராஷ்டிர மாநிலம் ஷீரடிக்குச் சென்றார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சென்ற அவர், ஷீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு முக்கியமான திருப்பு முனையாக உருவெடுத்துள்ளது. அரசியல் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்தக் கட்சியின் தாக்கம் குறித்து தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளுக்கு இடையேயான இருமுனைப் போட்டியே நிலவி வந்தது. விஜய்யின் வருகை மும்முனை போட்டியாக மாறியுள்ளது.

விஜய்யின் தவெக வருகையுடன், பாஜகவின் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோரின் தீவிர பிரச்சாரம் காரணமாக, ஒன்றுக்கொன்று வாக்குகளை பிரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வாக்கு சதவீதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் எனவும் கருத்து நிலவுகிறது.

சுமார் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தவெக பெறும் என்று கணிக்கப்படுவதால், பல தொகுதிகளில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இந்தக் கட்சி உருவெடுத்துள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+