கவிழ்கிறதா தவெக ஆட்சி? பதவியேற்கும் முன்பே விஜய்க்கு வந்த மிரட்டல்? அந்த 10 இடங்களால் வந்த வினை!
சென்னை: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு, ஆரம்பத்திலேயே மிகப்பெரிய முட்டுக்கட்டை விழுந்துள்ளது.. 234 தொகுதிகளில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட முடியாமல் போன அந்த '10' இடங்கள் தான் இப்போது பெரும் வினையாக மாறியுள்ளன.. இந்தச் சூழலைப் பயன்படுத்தி திமுக கூட்டணி கட்சிகள் மூலம் மறைமுக நெருக்கடி கொடுப்பதால், விஜய்யின் அரசு பதவியேற்கும் முன்பே கவிழும் அபாயம் உள்ளதா என்ற பகீர் கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது..
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும், ஆட்சி அமைப்பதில் நீடித்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு நேற்று வந்தது.. 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து முதலிடம் பிடித்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் போனது.

விஜய்க்கு வந்த நெருக்கடி
இந்த சூழலைத்தான் NDTV தனது விரிவான அலசலில் "Delicate Coalition Tango" என்று குறிப்பிட்டுள்ளது.. அதாவது, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே விஜய்யின் அரசு அமைகிறது என்பதை அப்பட்டமாகவே சொல்லிவிட்டது.
தனிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால், ஆட்சி அமைக்கத் தேவையான 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற விஜய் தீவிர முயற்சியில் இறங்கினார்.. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, மொத்தம் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டது.
விஜய் கொள்கைகள்
இருந்தாலும் இந்த ஆதரவு என்பது விஜய்யின் கொள்கைக்காகக் கொடுக்கப்பட்டது கிடையாது என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்..குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், "இது விஜய்க்கு அளிக்கும் ஆதரவு கிடையாது, மாறாகத் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக எடுத்த முடிவு" எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்..
கூட்டணி கட்சிகள் மீது திமுகவின் செல்வாக்கு இன்னும் நீடிப்பதாக தெரிகிறது.. திமுக கூட்டணியில் நீண்ட காலம் இருந்த காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இப்போது விஜய்க்கு ஆதரவு அளித்திருப்பது ஸ்டாலின் தரப்பிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம்பிக்கை துரோகம் என்ற திமுக
"நம்பிக்கை துரோகத்திற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என திமுக தரப்பில் இருந்து எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. நேரடி ஆட்சியில் திமுக இல்லாவிட்டாலும், கூட்டணி கட்சிகளின் மூலம் விஜய்யின் அரசுக்கு மறைமுக நெருக்கடிகளைக் கொடுக்கும் பலம் திமுகவிடம் இன்னும் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது..
விஜய் முதல் முறையாக பதவி ஏற்பதால், அவருக்கு நிர்வாக அனுபவம் இல்லாதது ஒரு பலவீனமாக கருதப்படுகிறது.. சட்டமன்றத்தில் ஒவ்வொரு மசோதாவை நிறைவேற்றும் போதும் கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அவர் பணிய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.. விஜய்யின் வேகமான அரசியல் வளர்ச்சி குறித்து எதிர்க்கட்சிகள் கவனமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.. இந்த நிலை விஜய்யின் அரசுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது..
ஆளுநர் காட்டிய பிடிவாதம்
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆரம்பத்தில் விஜய்யின் பெரும்பான்மை குறித்துச் சந்தேகம் எழுப்பியிருந்தார்.. ஆதரவு கடிதங்களைச் சரிபார்க்க வேண்டும் என அவர் பிடிவாதம் காட்டியதால், விஜய் 4 முறைக்கும் மேலாக ஆளுநர் மாளிகைக்குச் சென்று விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது..
இப்படி பெரும் போராட்டத்திற்குப் பிறகே இன்று காலை 10 மணிக்கு விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.. கூட்டணி ஆதரவைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது விஜய்யின் அரசுக்கு முக்கிய சவாலாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications