இன்ஸ்டாகிராம் மூலம் தேர்தலில் வென்ற விஜய்.. விராட் கோலியை விட அதிகம்.. வெளியான உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் யாரும் எதிர்பாராத வகையில் 108 இடங்களில் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். நடிகர் விஜய்க்கு 30 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் பலரும் வாக்களித்திருக்கிறார்கள். அதே போல் பெண்களும் அதிக அளவில் விஜய் பக்கம் நின்று இருக்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற போது ஒவ்வொரு தலைவர்களும் சூறாவளி போல் சுழன்று வர நடிகர் விஜய் அதிக நாள் ஓய்வெடுத்துக் கொண்டார் என்ற விமர்சனமே இருந்தது. பத்திரிகையாளர்களை கூட சந்திக்காமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் விஜய் எப்படி தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற குழப்பத்திற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

Vijay instagram

மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நடிகர் விஜய் தனது தேர்தல் பிரச்சார கருவியாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி இருப்பது தற்போது அம்பலமாகி இருக்கிறது. இன்ஸ்டாகிராம் மூலம் நடிகர் விஜய் பல்வேறு தேர்தல் பிரச்சார செயல்களில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இந்தியாவை பொறுத்தவரை அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் நபர் என்றால் அது விராட் கோலி தான்.

விராட் கோலியை 27 கோடியே 40 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். ஆனால் நடிகரும், தவெக தலைவருமான விஜயை வெறும் ஒரு கோடியே 70 லட்சம் பேர் தான் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். ஆனால் இங்கு தான் ஒரு காமெடி சம்பவம் நடந்திருக்கிறது. விராட் கோலி போடும் பதிவுக்கு வரும் லைக்ஸ் மற்றும் பார்வையாளர்களை விட நடிகர் விஜய்க்கு அதிக அளவு லைக் மற்றும் பார்வையாளர்கள் கிடைத்து இருப்பது தெரியவந்துள்ளது.

அதிலும் இந்த பாலோவர்ஸ் பார்வையாளர்கள் சென்னையிலிருந்து ஒரு அளவு கிடைத்தால் மற்ற பார்வையாளர்கள் துபாய்,துருக்கியில் உள்ள இஸ்தான்புல் போன்ற இடங்களில் இருந்து கிடைத்திருக்கிறது. இதன் மூலம் விஜய் போலியான பார்வையாளர்களை கொண்டு வந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

நடிகர் விஜய் போடும் ஒவ்வொரு ரீல்ஸ்க்கும் சராசரியாக 3 கோடி 70 லட்சம் பார்வையாளர்களும், 34 லட்சம் லைக்ஸ்களும், ஒரு லட்சத்து 36,000 கமெண்ட்களும் இடம்பெறுகிறது. இது விராட் கோலியை விட பல மடங்கு அதிகமாகும். இதில் திமுகவும், அதிமுகவும் பெரும் அளவு பின் தங்கி இருக்கிறது. குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கடைசியாக போட்ட instagram பதிவுக்கு 5 லட்சம் லைக்ஸ் வந்திருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடைசியாக போட்ட பதிவுக்கு வெறும் 27 ஆயிரம் லைக்கள் தான் கிடைத்திருக்கிறது. இது தவெகவை விட மற்ற கட்சிகள் எந்த அளவு பின் தங்கி இருக்கிறது என்பதை காட்டுகிறது.

விஜய்க்கு இருக்கும் பார்வையாளர்களில் 60 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் பெண்கள் என்றும் அதில் குறிப்பாக 26 வயதிலிருந்து 34 வயது உள்ள பெண்கள் தான் விஜய்யை அதிகளவு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் தவெக கட்சியை பற்றியும் திமுகவின் அரசியல் நிலை பற்றியும் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு இளம் தலைமுறைகளின் வாக்குகளை நடிகர் விஜய் பெற்று இருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+