சென்னை: நடிகை திரிஷா சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டது சினிமா தாண்டி அரசியல் விவாதமாக மாறி இருக்கிறது. சென்னை புனித சார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற நிலையில் திரிஷா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதிலும் திரு விஜய்யின் பெற்றோருக்கு பக்கத்தில் அவர் அமர்ந்திருந்த போட்டோக்கள் வெளியானதும் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பழைய பேச்சுக்கள் எல்லாம் கிளம்ப தொடங்கினர்.
விஜயுடன் திரிஷாவுக்கு இருக்கும் உறவு என்ன? இருவரும் நண்பர்களா? அல்லது வேறு ஏதாவது இருக்கிறதா? என்று பலரும் வழக்கம் போல தங்களுக்கு தெரிந்தது போல பேச ஆரம்பித்தனர். இதைத்தொடர்ந்து சில அரசியல் விமர்சனங்களிலும் திரிஷாவின் பெயர் இழுக்கப்பட்டது. அரசியல்வாதியாக விஜயை விமர்சிக்க வேண்டிய இடத்தில் அவருடன் ஒரு பெண்ணை வைத்து பேசுவது சரியா? என்ற கேள்வியும் எழுந்தது.
நடிகை சஞ்சனா பேட்டி
இந்த நிலையில்தான் நடிகை சஞ்சனா கல்ராணி திரிஷாவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். விஜயை விமர்சிக்க உங்களுக்கு தைரியம் இருந்தால் அவருடைய அரசியலைப் பற்றி பேசுங்கள். அவருடைய ஆட்சியைப் பற்றி பேசுங்கள், ஒரு பெண்ணை ஏன் இழுக்கிறீர்கள். இப்போது விஜய் ஒரு நடிகர் மட்டுமல்ல அரசியலில் இருக்கும் ஒரு தலைவர். அதனால் அவருடைய ஆட்சி, அவர் எடுக்கும் முடிவுகள், அரசியல் செயல்பாடுகள் ஆகியவற்றை பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்.
ஆனால் அதற்கு பதிலாக அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை நோக்கி செல்வது எந்த வகையில் அரசியல் விமர்சனம் ஆகும்? என்று சஞ்சனா கேட்டிருக்கிறார். அதிலும் திரிஷா ஒரு தனி அடையாளத்துடன் இருக்கும் நடிகை, பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ இல்லை யாருடன் நட்பு வைக்க வேண்டும் என்பதெல்லாம் அவருடைய சொந்த முடிவு. அதற்கு அரசியல் சாயம் கொடுப்பது ஏற்க முடியாது என்று சஞ்சனா கூறி இருக்கிறார். விஜயும் திரிஷாவும் நண்பர்களாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, காதலர்களாக இருந்தாலும் சரி, அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். அதை வைத்து ஏன் ஒரு பெண்ணை மதிப்பிட வேண்டும் என்று சஞ்சனா கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் இந்த விவாதம் வேறு விதமான திசைக்கு திருப்பி உள்ளது. திரிஷா சுதந்திர தின விழாவுக்கு வந்தது ஏன்? விஜய்யின் பெற்றோருக்கு பக்கத்தில் அமர்ந்ததற்கு என்ன அர்த்தம் என்று கேட்பதைவிட அவர் அங்கு வந்தது ஒரு குடிமகளாவும், பிரபலமாகவும் கலந்து கொண்ட நிகழ்வு என்று அளவில் பார்க்க முடியாதா? என்பதுதான் சஞ்சனா தரப்பில் முன்வைக்கப்படும் கேள்வி. இதனால் திரிஷா தொடர்பான சர்ச்சையை விட ஒரு பெண்ணின் பெயரை வைத்து அரசியல் விமர்சனம் செய்வது சரியா என்று புதிய கேள்வியே இப்போது சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.திரிஷாவுக்கு சப்போர்ட்
நடிகை எழுப்பிய கேள்வி