மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்து.. சாத்தான்குளம் டீக்கடையில் திருடன் செய்த காரியம் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் சைக்கிளைத் திருடிச் சென்ற நபர், வழியில் உள்ள டீக்கடையில் புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.9,300 பணத்தையும் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. டீ குடித்ததுடன் சிகரெட்டும் வாங்கிவிட்டு, அதற்கான பணத்தையும் திருடிய பணத்திலிருந்தே கொடுத்துவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார். சாத்தான்குளத்தில்தான் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது..!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் நடராஜர் என்பவர் பகுதிநேர ஊழியராகப் வேலை பார்த்து வருகிறார். இவர் எப்போதுமே சைக்கிளில்தான் டியூட்டிக்கு வந்து செல்வாராம்..

Sathankulam Tea Shop

சாத்தான்குளம் அரசு மருத்துவமனை

அப்படித்தான் நேற்றிரவும், வழக்கம்போல் தனது சைக்கிளை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு, பணிக்கு சென்றுவிட்டார்.. ஆனால், நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த அவரது சைக்கிள் திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜர், இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நபர், நடராஜரின் சைக்கிளை திருடியதுடன், அதை எடுத்துக்கொண்டு சாத்தான்குளம் மெயின் பஜாரில் உள்ள டீக்கடை சென்றது தெரியவந்தது.

டீக்கடையில் திருட்டு

அந்த டீக்கடை வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு, டீ குடிக்க சென்ற அந்த நபர், கல்லாப்பெட்டியில் ஊழியர் ஒருவர் இருப்பதை கவனித்துள்ளார்... பிறகு கல்லாப்பெட்டி மீதே குறி வைத்து, அங்கேயே கவனித்து கொண்டிருந்தார்.. சிறிது நேரத்தில் கல்லாப்பெட்டியில் நின்றுகொண்டிருந்த ஊழியர், இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். உடனே இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், கல்லாப்பெட்டியை திறந்து அதிலிருந்த ரூ.9,300 பணத்தை நைசாக திருடி விட்டார்.

திருடிய பணத்தில் டீ

அதுமட்டுமல்ல, பணத்தை திருடியதுடன், தான் குடித்த டீ மற்றும் வாங்கிய சிகரெட்டுக்கான பணத்தையும் அதே கல்லாப்பெட்டியில் இருந்து திருடிய பணத்திலிருந்தே எடுத்து கடை ஊழியரிடம் கொடுத்துள்ளார். பிறகு, கடைக்கு வெளியே வந்த அவர், தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று எண்ணிப் பார்த்துவிட்டு, திருடிய பணத்துடன் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பிறகு, கடை ஊழியர் கல்லாப்பெட்டியில் பணத்தை காணோம் என்றதுமே, பதறிப்போன டீக்கடை உரிமையாளர், பல்வேறு இடங்களில் அந்த நபரை தேடியுள்ளார்... ஆனால் அந்நபர் அங்கிருந்து கிளம்பிவிட்டதையறிந்த உரிமையாளர், உடனடியாக போலீசில் புகார் தந்தார்.. இதையடுத்து போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கல்லாப்பெட்டி பணம்

பிறகு, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் திருட்டில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.. சம்பந்தப்பட்டவர் பெயர் ஜேக்கப்.. முதலூரைச் சேர்ந்தவராம்.. இவர் இதுபோல வேறு எங்கெல்லாம் திருட்டு செயல்களில் ஈடுபட்டார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் ஜேக்கப் சைக்கிள் திருடியதும், டீக்கடை கல்லாப்பெட்டியில் பணத்தை திருடியதும், இப்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+