திருமண விழாவில் ரகசிய பேச்சு? தூத்துக்குடி மெகா துறைமுகத்தை குறிவைக்கும் அதானி! விஜய் கிரீன் சிக்னல்
சென்னை: தூத்துக்குடி துறைமுகத்தில் வெளித்துறைமுக உள்கட்டமைப்பை வலிமை படுத்தும் திட்டத்தை கைப்பற்ற அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் போட்டிப்போடும் நிலையில், முதல்வர் விஜய்யிடம் இது குறித்து அதானி விவாதித்திருக்கிறார் என்கிறார்கள்.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் திருமணத்தில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் திருமணத்தில் முதல்வர் விஜய்
இந்தியாவின் டாப் மோஸ்ட் தொழிலதிபரான அதானியும் இந்த திருமண நிகழ்வுக்கு வந்திருந் தார். திருமண நிகழ்விற்கு வந்திருந்த விஜய் மற்றும் அதானியை ஜெகன் மோகன் ரெட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
இந்த விழாவில் கலந்துகொண்ட விஜய், அதானி, ஜெகன் மோகன் மூவரும் தனிப்பட்ட முறையில் பல்வேறு விசயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது, இரண்டு விசயங்களை முன்னிறுத்தி அதானிக்காக விஜய்யிடம் பேசியுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி என்கிற தகவல்கள் கிடைத்த நிலையில், இது குறித்து, தமிழக அரசின் தொழில் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தோம்.
தமிழகத்தில் அதானியின் நிறுவனங்கள்
நம்மிடம் பேசிய அவர்கள், ஜெயலலிதா ஆட்சி காலத்திலிருந்தே தமிழகத்தில் அதானியின் நிறுவனங்கள் தங்களில் தொழிலை நடத்தி வருகின்றன. பிறகு எடப்பாடி ஆட்சியிலும், ஸ்டாலின் ஆட்சியிலும் அதானியின் தொழில் கள் விரிவடைந்தன. மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கி துறைமுகத் திட்ட ங்கள் வரை நீக்கமற நிறைந்திருக்கிறார் அதானி.
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.11,737 கோடி திட்டம்
இந்த நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் 11,737 கோடி மதிப்பிலான வெளித்துறைமுக உள்கட்டமைப்புத் திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் திறனை மேம்படுத்துவ துடன், சர்வதேச கடல் வணிகத்தை அதிகரிப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக துறைமுகத்தின் வெளிப்புறங்களில் உள் கட்டமைப்பு வசதிகளை வலிமையாக உருவாக்கவும், அதற்கு அடிப்படையாக அலை தடுப்பு சுவர்கள் மற்றும் கடலில் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
11,737 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தை கைப்பற்ற இந்தியாவின் முன்னணி நிருவனங்கள் போட்டிப்போட்டன.
3 பெரு நிறுவனங்கள் போட்டியில் நிற்கின்றன
இறுதியில், அதானி போர்ட்ஸ், விஸ்வா சமுத்திர, மேகா இன்ஜினியரிங் ஆகிய 3 பெரு நிறுவனங்கள் போட்டியில் நிற் கின்றன. திட்டத்தைக் கைப்பற்ற இந்த நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில்தான், ஜெகன் மோகன் ரெட்டியின் முயற்சியில் முதல்வர் விஜய், தொழிலதிபர் அதானி ஆகியோரின் சந்திப்பு நடந்தது. அதில் இந்த துறைமுக திட்டம் தங்களுக்கு கிடைக்க தேவையான உதவியை செய்ய இயலுமா என விஜய்யிடம் ஜெகன்மோகன் ரெட்டி மூலமாக வைத்திருக்கிறார் அதானி. உயரதிகாரிகளிடம் கலந்துப்பேசிவிட்டு தகவல் தருகிறேன் என விஜய் சொல்லியிருக்கிறார்.
மேலும், சென்னை உள்பட தமிழகத்திலிருக்கும் முக்கிய விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் ப்ராஜெக்ட்டிலும் தங்களுக்கு உதவு மாறு அதானி சார்பில் விஜய்யிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நடக்கும் முக்கியமான மெகா ப்ராஜெக்ட்டுகளை கைப்பற்ற அனைத்து தூண்டில்களையும் போட்டு வருகிறார் அதானி. அவரது முயற்சி முதல்வர் விஜய்யிடம் பலிக்குமா என்பது இன்னும் 1 மாதத்தில் தெரிய வரும் என்று சொல்கிறார்கள் தொழில்த்துறையினர்.
- சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
