பவன் கல்யாணுக்காகவும், மகனுக்காகவும் மொட்டை போட்டு 3வது மனைவி செய்த செயல்.. இப்போ பிரிவுக்கு காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பவன் கல்யாண் உடல் நலம் சரியாக வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு அவருடைய 3வது மனைவி திருப்பதி கோவிலில் 3550 படிக்கட்டுகள் ஏறி மொட்டை போட்டு பரிகாரம் செய்து இருந்தார். ஆனால் இன்று இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். இது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. பழைய புகைப்படங்களும் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

ஆந்திரா மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் அவருடைய மனைவி அன்னா லெஷ்னேவாவும் 13 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிவதாக நவம்பர் 9ஆம் தேதி ஆன நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தனர். இருவரும் பரஸ்பர புரிதலுடன், மரியாதையுடனும் இந்த முடிவை எடுத்திருப்பதாக அதில் சொல்லியிருக்கின்றனர். இந்த அறிக்கை வெளியானதும் சில மாதங்களுக்கு முன்பு அன்னா செய்த செயல் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Pawan Kalyan

மகனுக்கு ஏற்பட்ட விபத்து

கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பவன் கல்யாண் குடும்பத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. சிங்கப்பூரில் பள்ளி கோடை விடுமுறை முகாமின் போது ஏற்பட்ட தீ விபத்தில் அவர்களுடைய மகன் மார்க் ஷங்கர் சிக்கிக்கொண்டார். இந்த விபத்தில் அவருக்கு கைகளில் தீக்காயங்களும், புகையை சுவாசித்ததால் நுரையீரல் தொடர்பான பிரச்சனையும் ஏற்பட்டதாக அப்போது செய்திகள் வெளியானது. அப்போது மகனை பற்றிய செய்தியை கேட்டதும் பவன் கல்யாணும் அவருடைய மனைவியும் சிங்கப்பூருக்கு சென்றனர்.

Pawan Kalyan

அங்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த மார்க் பிறகு உடல் நலம் தேறி குடும்பத்துடன் இந்தியா வந்தார். மகன் பாதுகாப்பாக மீண்டு வந்ததை தொடர்ந்து அன்னா திருப்பதி திருமலைக்கு சென்று தனது வேண்டுதலை நிறைவேற்றி இருந்தார். அப்போது அவர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி மொட்டை போட்டார். அதற்கு பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளிலும் கலந்து கொண்டார். தனது மகன் பெயரில் அன்னதானத்துக்காக 17 லட்சம் நன்கொடையும் வழங்கினார். தானும் பக்தர்களுடன் உட்கார்ந்து உணவு அருந்தி, அங்கு வந்த பக்தர்களுக்கு உணவு பரிமாறவும் செய்திருந்தார். அப்போது எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

பவன் கல்யாண் மனைவி வழிபாடு

ரஷ்யாவை சேர்ந்த அன்னா, இந்திய கோவில் வழக்கப்படி தலை முடியை காணிக்கையாக செலுத்தியதும் அப்போது பெரிதாக பேசப்பட்டது. இதற்கிடையில் கடந்த 2026 ஜூலை மாதம் பவன் கல்யாணுக்கும் உடல்நல பிரச்சனை ஏற்பட்டது. அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்கு மும்பையில் உள்ள ஒரு ஹாஸ்பிடலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அப்போது அவர் விரைவில் உடல்நிலை சரியாக வேண்டும் என்று அவருக்காக அன்னா திருமலைக்கு சென்று மீண்டும் வழிபட்டார். அலிபிரி நடைபாதை வழியாக மலைக்கு சென்ற அவர் ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டார்.

Pawan Kalyan

பின்னர் கணவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்து சோசியல் மீடியாவில் பதிவும் வெளியிட்டு இருந்தார். தனது மகன் மற்றும் கணவருக்காக அவர் கோவில் கோவிலாக சென்று வழிபாடு செய்திருந்தார். இப்படி குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்திருந்த அன்னா இப்போது திடீரென விவாகரத்துக்கு சம்மதித்திருக்கிறார் என்றால் என்னவாக இருக்கும்? என்று பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.

பவன் கல்யாண் அறிக்கை

ஆனால் இவர்களுடைய பிரிவுக்கு காரணம் என்ன என்பது பற்றி அந்த அறிக்கையில் எந்த தகவலையும் சொல்லவில்லை. திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும் தாங்கள் நல்ல நண்பர்களாகவும், குழந்தைகளுக்கு பொறுப்பான பெற்றோர்களாகவும் தொடர்வோம். குழந்தைகளின் மகிழ்ச்சியும், நலனும் தங்களுடைய பொதுவான முன்னுரிமையாக இருக்கும். இந்த தனிப்பட்ட மாற்றத்தை அனைவரும் புரிந்துகொண்டு தங்களுடைய தனி உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் பவன் கல்யாண் எதற்காக திடீரென விவாகரத்து செய்கிறார் என்ற பேச்சு இணையத்தில் போய்க் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+