டோரதி vs மீசைய முறுக்கு 2... 5 நாள் வசூலில் யாருக்கு கை ஓங்குது? நேற்றைய நிலவரம் இதுதான்!

  • சென்னை: செப்டம்பர் 25-ம் தேதி தமிழ் சினிமாவில் 2 வித்தியாசமான படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. ஒரு பக்கம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த டோரதி. இன்னொரு பக்கம் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவான மீசைய முறுக்கு 2. இரண்டு படங்களுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்போது 5 நாட்கள் வசூல் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

    Advertisement

    டோரதி வசூல் நிலவரம்

    முதலில் டோரதியை எடுத்துக்கிட்டோம்னா, படம் முதல் நாளில் இந்திய அளவில் சுமார் ரூ.90 லட்சம் நெட் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் கணக்குகள் தெரிவிக்கின்றன. 2வது நாளில் வசூல் ரூ.1.17 கோடியாக அதிகரித்தது. மூன்றாவது நாளும் சுமார் ரூ.1.40 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. நேற்று, அதாவது 5வது நாளில் டோரதியின் வசூல் சுமார் ரூ.94 லட்சம் என்ற நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 850-க்கும் மேற்பட்ட காட்சிகளில் படம் ஓடியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், முதல் வாரத்தில் பெரிய சரிவு இல்லாமல் படம் ஓடிக்கொண்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

    Advertisement

    டோரதிக்கு ஆரம்ப நாளில் வசூல் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சனி, ஞாயிறு நாட்களில் கூட்டம் அதிகரித்தது. அதன்பிறகு திங்கள், செவ்வாய்க்கிழமைகளிலும் வசூல் முழுவதுமாக சரிந்துவிடாமல் இருப்பது படக்குழுவுக்கு ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

    மீசைய முறுக்கு 2 வசூல் நிலவரம்

    இன்னொரு பக்கம் மீசைய முறுக்கு 2. ஆதி நடித்துள்ள இந்தப் படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.3.30 கோடி இந்திய நெட் வசூல் செய்ததாக தகவல்கள் வந்தன. அதன்பிறகு சனி, ஞாயிறு நாட்களில் வசூல் அதிகமாக இருந்த நிலையில், வார நாட்களில் கொஞ்சம் குறைய ஆரம்பித்திருக்கிறது. நேற்று வது நாளில் மீசைய முறுக்கு 2 சுமார் ரூ.2.39 கோடி அளவுக்கு வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
    இதனால் 5 நாள் வசூலை மட்டும் வைத்து பார்த்தால் மீசைய முறுக்கு 2 தெளிவாக முன்னிலையில் இருக்கிறது.

    Advertisement

    படத்தின் கதை

    ஆனால் டோரதி விஷயத்தில் இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்தப் படம் வழக்கமான கமர்ஷியல் கதையில் வராமல், 1990-களின் கிராமப்புற பின்னணியில் மனித உறவுகள், சாதி, ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியிலும் கலவையான கருத்துகள் இருக்கின்றன. அதே நேரத்தில் படத்தின் நடிப்பு மற்றும் இளையராஜாவின் இசை குறித்து பாராட்டுகளும் வந்துகொண்டிருக்கின்றன.

    மேலும் டோரதிக்கு முதல் நாளை விட 2வது நாளில் வசூல் சுமார் 30 சதவீதம் அதிகரித்தது. இதுவே படத்துக்கு வாய்மொழி மூலம் கொஞ்சம் கூட்டம் வர ஆரம்பித்திருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மீசைய முறுக்கு 2வை பொறுத்தவரை, முதல் படத்துடன் இருக்கும் தொடர்பு, ஆதி ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பு ஆகியவை தொடக்க வசூலுக்கு கை கொடுத்திருக்கிறது.

    Advertisement

    அதனால் இப்போதைக்கு இரண்டு படங்களையும் ஒப்பிட்டு பார்த்தால், வசூலில் மீசைய முறுக்கு 2 முன்னால் இருக்கிறது; டோரதி சீரான ஓட்டத்தை தக்கவைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல முடியும்.

    English Summary

    Dorothy vs Meesaya Murukku 2: Dorothy vs. Meesaya Murukku 2 : On September 25th, two distinct films were released in Tamil cinema on the same day: *Dorathi*, directed by Karthik Subbaraj and starring Keerthy Suresh, and *Meesaya Murukku 2*, starring Hiphop Tamizha Adhi. Given the anticipation surrounding both films from the start, the box-office performance over the first five days is now a key point of interest.