குருவின் முன் மீண்டும் சீடனாக மாறிய பிரபுதேவா... மாஸ்டர் இன்னும் மாஸ்டர் தான்! கலக்கிட்டாரே

  • சென்னை: டான்ஸ் என்றாலே இந்திய சினிமாவில் முதலில் நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று பிரபுதேவா. பல தலைமுறைகளை தனது டான்ஸ் அசைவுகளால் வியக்க வைத்த அவர் தற்போது மீண்டும் ஒரு டான்ஸ் வீடியோவால் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளார் ஆனால் இந்த முறை அது எந்த சினிமா படப்பிடிப்புக்காகவும் இல்லை, ஆடியோ லான்ச் ஆகவும் இல்லை.. தனக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்த குருவுக்கு மரியாதை செலுத்துவதற்காக தான்.

    Advertisement

    பிரபுதேவாவின் பரதநாட்டியம்

    சமீபத்தில் சென்னை நாரத கானா சபையில் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரும் கலைமாமணி குரு லட்சுமி நாராயணனின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. குருபூர்ணிமாவை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபுதேவா மேடையில் தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோவை தான் தற்போது ரசிகர்கள் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    Advertisement

    குருவுக்கு மரியாதை

    53 வயதாகும் பிரபுதேவா பரதநாட்டியம் ஆடியதை பார்த்து ரசிகர்கள் வாவ் சொல்லி வருகிறார்கள். பிரபுதேவா நடித்த காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற நடன அசைவுகளுக்கு பின்னால் இருந்த ஒரு முக்கிய வழிகாட்டி குரு லட்சுமி நாராயணன் தான். காதலன் படத்தில் பிரபுதேவாவின் டான்ஸ் பெர்பார்மன்ஸை அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்து இருக்க முடியாது. அவருக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை கொடுத்த அந்த குருவிற்கு டான்ஸ் மூலமாகவே பிரபுதேவா நன்றியை செலுத்தி இருக்கிறார்.

    பிரபு தேவாவின் பல திறமை

    இன்று இந்திய சினிமாவில் மிகச் சிறந்த நடன கலைஞர்களில் ஒருவராக பிரபுதேவா இருக்கிறார். அதோடு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல முகங்களுடன் பயணித்தாலும் தனது வெற்றிக்கு பின்னால் இருந்த குருவை மறக்காமல் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தி இருப்பது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

    Advertisement

    வீட்டுக்குள்ளே பணத்தால் பாகுபாடு.. பிரபுதேவா பொண்ணு வந்த பிறகு எல்லாமே மாறிப்போச்சு! நாகேந்திர பிரசாத் உருக்கம்
    பிரபுதேவாவின் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அதே வேகத்திலும் உற்சாகத்துடன் பிரபுதேவா டான்ஸ் ஆடுகிறார் என்று கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் மாஸ்டர் எப்போதும் மாஸ்டராக தான் இருக்கிறார் என்றும், பிரபுதேவா ஆடுறதை பார்க்கும்போது வயசே தெரியல என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    பாராட்டு

    பிரபுதேவா அடிக்கடி சோசியல் மீடியா பக்கத்தில் டான்ஸ் ஆடி வீடியோக்கள் வெளியிடுவார். சமீபத்தில் கூட அவருடைய மகனுடன் கடற்கரையில் டான்ஸ் ஆடிய வீடியோ பெரிதாக பேசப்பட்டது. ஆனால் இந்த முறை அவரின் நடனத்தை விட, அவர் ஆடிய காரணம்தான் பலருடைய மனதை தொட்டிருக்கிறது. தன்னை உருவாக்கிய குருவின் நூற்றாண்டு விழாவில் சீடராக வந்து மரியாதை செலுத்திய தருணத்தை பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

    English Summary

    Prabhu Deva: Prabhu Deva is one of the first names that comes to mind when one thinks of dance in Indian cinema. Having wowed generations with his dance moves, he is now back on social media with a dance video, but this time it's not for any film shoot, nor an audio launch.. it's to pay homage to the guru who taught him dance.