சென்னை: விஜய் திரிஷா தொடர்பான சர்ச்சைகள் சினிமாவை தாண்டி அரசியல் விவாதகமாக மாறி உள்ள நிலையில் விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் புஷ்பலதா வெளியிட்டுள்ள புதிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. திரிஷாவும் ஒரு பெண் சிங்கமாக வரலாம் அவரை நான் ஆதரிப்பேன் என்று அந்த பெண் பேசி இருக்கிறார். அது பலருடைய கவனத்தை பெற்றுள்ளது.
முதல்வர் விஜய் தொடர்பாக சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக அரசியல் களத்திலும், சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா முன்வரிசையில் அமர்ந்திருந்ததும் அணிவகுப்பின்போது விஜய் அவருக்கு சல்யூட் செய்ததும், விழா முடிந்து திரிஷா விஜய்க்கு கைகாட்டி விடைபெற்றதும் வைரல் ஆனது.
திரிஷா பற்றிய சர்ச்சை
திரிஷா ஏன் அரசு விழாவில் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டார் என்பது தொடர்பான அரசியல் விமர்சனங்களும் இருந்தன. திமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தளமான முரசொலியும் இந்த விவாகரத்தை விமர்சித்துள்ளது. இந்த பரபரப்பு ஓய்வதற்குள் விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் புஷ்பலதா வெளியிட்ட வீடியோவும் இணையத்தில் விவாதத்தை ஏற்பட்டிருக்கிறது.
அந்த வீடியோவில் புஷ்பலதா பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா எவ்வளவு போராட்டத்திற்கு பிறகு முதலமைச்சரானார். அவர் நடிகையாக இருந்தாலும் மிகப்பெரிய அறிவாளி. அவரை அடித்துக் கொள்ள யாராலும் முடியவில்லை. அவர் இருந்தவரை பெண் சிங்கமாக இருந்தார். அவங்கள மாதிரி திரிஷாவால ஆக முடியாதா? சினிமாவில் 20 வருஷமா இருக்காங்க.
எல்லா பிரச்சனை வந்தாலும் தைரியமாக நிற்கிறாங்க. ஏன் அவங்க துணை முதல்வராக முடியாதா? சினிமாவில 20 வருஷமாக இருக்காங்க. எவ்வளவு பிரச்சனை வந்தாலும் தைரியமாக நிக்கிறாங்களே ஏன் அவங்க துணை முதல்வராக முடியாது? அவங்களும் பெண் சிங்கம் மாதிரி வருவாங்க.. நானும் ஆதரவு தருவேன் என்று புஷ்பலதா பேசியிருக்கிறார். ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு விஜய் என்னுடைய மகன்... விஜய் வந்த பிறகு பல மாற்றங்கள் நடந்து இருக்கிறது. என் மகன் வெற்றிபெற வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டி இருந்தேன். அதனால் பாதயாத்திரை போய்விட்டு வந்திருக்கிறேன் என்று புஷ்பலதா மூச்சு வாங்க பேசிய வீடியோக்கள் கூட இணையத்தில் ட்ரோல் செய்தனர். முதல்வர் மகன் ஜேசன் சஞ்சயின் சிக்மா ரிலீஸ் தேதி வந்தாச்சு.. ப்ரோமோஷனுக்கு வரும் விஜய்- சங்கீதா? ட்விஸ்ட்!திரிஷாவுக்கு சப்போர்ட்
விஜய்க்கு ரசிகையாக ஆதரவு
அவர் துணை நடிகையாக சில youtube வீடியோகளில் நடித்திருந்தாலும் அதை வைத்து பலர் அவரை விமர்சித்து வந்தனர். ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் விஜய்க்கு சப்போர்ட் பண்ணி கொண்டு இருந்த புஷ்பலதா இப்போ திரிஷாவிற்கும் சப்போர்ட் பண்ண ஆரம்பித்திருக்கிறார்.