வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா முதல் 3000 பாடல்கள் பாடிய கிருஷ்ணராஜ் மறைவு! அவர் யார்? பின்னணி தகவல்!

  • சென்னை: ஒரு பாடல் ஹிட்டானால் அதில் நடித்த ஹீரோவையும், இசையமைத்தவரையும் உடனே சொல்லிவிடுவோம். ஆனால் அந்த பாடலை பாடியவர் யார் என்று கேட்டால் சில நேரங்களில் யோசிக்க வேண்டியிருக்கும். தமிழ் சினிமாவில் இப்படி பல பாடல்களை பாடி, ரசிகர்களுக்கு பரிச்சயமான குரலாக இருந்தும் பெயரளவில் அதிகம் பேசப்படாமல் போனவர்களில் ஒருவர்தான் பாடகர் கிருஷ்ணராஜ்.

    Advertisement

    இப்போது அவரது மறைவு குறித்த தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அவர் பாடிய பழைய பாடல்களை ரசிகர்கள் மீண்டும் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். கிருஷ்ணராஜ் என்ற பெயர் பலருக்கும் உடனடியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர் பாடிய பாடல்களில் சிலவற்றைக் கேட்டால், "அட, இந்தப் பாட்டையெல்லாம் இவர்தான் பாடினாரா?" என்று ஆச்சரியப்பட வாய்ப்பிருக்கிறது.

    Advertisement

    நெசவு தொழிலில் இருந்து பாடகர்

    கிருஷ்ணராஜின் வாழ்க்கை பயணத்தைப் பார்த்தால், அவர் ஆரம்பத்திலிருந்தே சினிமாவில் பாட வேண்டும் என்ற வாய்ப்புடன் வளர்ந்தவர் கிடையாது. சேலம் மாவட்டம் வேம்படிதாளம் பகுதியில் நெசவுத் தொழில் பின்னணியை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் நெசவு தொழில் செய்து வந்திருக்கிறார். அதேசமயம் இசை மீதான ஆர்வத்தையும் கைவிடவில்லை.

    'தஞ்சாவூரு மண்ணெடுத்து’ பாடிய கிருஷ்ணராஜும் காலமானார்.. தேவா சோகம் தணிவதற்குள் அடுத்த துயரம்

    இசை குழுக்களிலும் நாடகங்களிலும் பாடிய அனுபவம் அவருக்கு இருந்தது. பின்னர் சென்னை வந்து முறையாக இசை பயின்று, இசையமைப்பாளர் ராமானுஜத்திடம் உதவியாளராகவும் பணியாற்றினார். விளம்பர பாடல்கள் பாட கிடைத்த வாய்ப்பை வைத்து தனது குரலை பதிவு செய்யத் தொடங்கியவர், அதன் பிறகு திரைப்பட பாடகராகவும் வளர்ந்தார்.

    Advertisement

    கிருஷ்ணராஜ் பாடிய பாடல்கள்

    கிருஷ்ணராஜ் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வரும் பாடல்களைத் தாண்டி, அவர் பாடிய மற்ற பாடல்களையும் கவனித்தால் அவருடைய குரல் எத்தனை விதமான பாடல்களில் இடம்பெற்றிருக்கிறது என்பது புரியும். காதல் கோட்டை படத்தில் வந்த 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' கிருஷ்ணராஜின் ஆரம்பகால வெற்றிப் பாடல்களில் முக்கியமானது. துள்ளலான இந்தப் பாடல் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தியது. அதுபோல நட்புக்காக படத்தில் வந்த 'கருடா கருடா உன் காதலை சொல்லிவிடு' என்ற தேவா இசையில் வெளியான பாடலையும் தேவா பாடியதுதான். காதல் பாடல்களிலும் தனது குரலால் கவனம் பெற்றிருக்கிறார்.

    Advertisement

    பிரபுதேவா, விவேக் உள்ளிட்டோர் நடித்த நினைவிருக்கும் வரை படத்தின் சில பாடல்களையும் கிருஷ்ணராஜ் பாடி இருக்கிறார். ஆனந்த பூங்காற்றே படத்தில் தேவா இசையில் உருவான "பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்" பாடலில் ஹரிஹரனுடன் இணைந்து கிருஷ்ணராஜ் பாடியிருந்தார். சித்ராவுடன் இணைந்து வாய்மையே வெல்லும் படத்தில் குயில் பாட்டு என்ற பாடலும் ஹிட்டானது. இவை சில உதாரணங்கள் மட்டும்தான். அவருடைய பாடல்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால், 90-களின் திரைப்பட இசையிலும் அதன் பிறகான காலகட்டத்திலும் அவர் தொடர்ந்து பாடி இருக்கிறார். அவரது குரலை கேட்டிருக்கிறோம், ஆனால் பாடகரின் பெயரைக் கவனிக்காமல் விட்டிருக்கலாம் என்பதுதான் இங்கு வேதனை.

    Advertisement

    3,000 பாடல்கள்

    3,000-க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடி சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல் பக்தி பாடல்களையும் பாடி இருக்கிறார். இதுதான் கிருஷ்ணராஜின் இசை பயணத்தில் பலருக்கும் தெரியாத இன்னொரு பக்கம். ஒரு காலத்தில் ரேடியோவில் ஒரு பாடல் ஒலித்தால், அதன் இசையமைப்பாளர் யார், பாடியவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ரசிகர்களுக்கு இருந்தது.

    இப்போது பழைய பாடல்களை யூடியூபில் தேடி கேட்கும்போதும், பலர் பாடலின் முதல் வரியைத்தான் தேடுகிறார்கள். பாடகரின் பெயரைத் தேடுவது அதற்குப் பிறகுதான் நடக்கிறது. கிருஷ்ணராஜின் விஷயத்திலும் இதைப் பார்க்க முடிகிறது. அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களிடையே பிரபலமானவை. ஆனால் அந்த பாடல்களைபாடியவர் யார் என்ற கேள்வி இப்போது அவரது மறைவு குறித்த செய்தி வெளியான பிறகுதான் பலருக்கும் எழுந்திருக்கிறது.

    Advertisement
    தேவா செய்த புண்ணியத்தால தான் இப்படி இறப்பு.. கடைசி நேரத்தில் நடந்த சம்பவம்! கேஎஸ் ரவிக்குமார் உருக்கம்

    English Summary

    Singer Krishnaraj: Singer Krishnaraj passing, fans have begun revisiting the old songs he sang. While the name "Krishnaraj" might not be immediately familiar to many, listening to some of the songs he performed could come as a surprise—leading one to wonder, "Oh, was it really him who sang these?"