சென்னை: முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு சினிமா பிரபலங்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் அவருடைய ஆட்சியை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் தம்பி ராமையா செய்தியாளர்கள் சந்திப்பின்போது எம்.ஜி.ஆருடன் முதல்வர் விஜய்யை ஒப்பிடுவது குறித்து ஓபனாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அது இணையத்தில் பலருடைய கவனத்தை பெற்று வருகிறது.
இயக்குனரும், நடிகருமான தம்பி ராமையா மனதில் பட்டதை வெளிப்படையாகவே பேசிவிடுவார். அவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் மகன் நடிக்கும் புது படத்தின் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். அதில் தேவா பற்றி முதலில் பேசி இருந்தார். மறைந்த தேவாவின் இறப்பை பலரும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருவதை போலத்தான் நானும் தவித்து வருகிறேன். தேவா எப்போதுமே எளிமையானவர், பழசை மறக்காதவர். ஆரம்பத்தில் அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார். அந்த கஷ்டத்தில் இருந்து அவரே படிப்படியாக முன்னேறி வந்திருந்தாலும் அவர் கடைசி வரைக்கும் தான் வந்த பாதையை மறந்து விடவில்லை. அதுபோல அவருடைய குடும்பத்திற்கு அவர் கொடுத்த முக்கியத்துவமும் பலருக்கு பாடம். நம்ம பலரை பார்த்து இருப்போம் அவங்க ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு இருந்தாலும் ஒரு ஸ்டேஜுக்கு வந்த பிறகு சொந்த பந்தம் குடும்பம் எல்லாத்தையும் விட்டுடுவாங்க. குடும்பத்தை பற்றி யோசிக்க மாட்டாங்க. ஆனால் தேவா அப்படி கிடையாது. அவருடைய தம்பி இறப்பின் போது கூட ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க, அதெல்லாம் மறக்கவே முடியாது. என்னுடைய தம்பியால்தான் நான் இன்னைக்கு இவ்வளவு தூரம் வளர்ந்தேன், என்னுடைய தம்பி தான் என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம். எங்க குடும்பத்திலேயே முதலில் வீடு வாங்கியது அவன் தான். எல்லாருக்கும் முன்மாதிரியாக இருந்தான் என்று ஒரு அண்ணன் பெருமையாக பேசினார். இதுபோல வேற யாராவது பேசுவாங்களா? என்பது கேள்விக்குறிதான். தேவா கடைசி வரைக்கும் அவருடைய குடும்பத்தை ரொம்பவே நல்லா பாத்துக்கிட்டாரு. அவருடைய இறப்பில் கூட அண்ணன் சிவகுமார் ஒரு வார்த்தை சொன்னாரு, தேவா ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கிறார் அதனால் தான் ஒரு சின்ன வலி கூட இல்லாமல் போயிட்டாரு என்று சொன்னாரு. அது உண்மைதான். அவருடைய முகத்தை பார்த்தால் எப்போதுமே சாந்தமும் சந்தோஷமான ஒரு மனநிலை வரும் என்று தேவாவை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தம்பி ராமையா விடம், முதல்வர் விஜய்யின் ஆட்சி எப்படி இருக்கிறது? அவரை முன்னால் முதல்வர் எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு இருக்கிறார்களே என்று கேட்டனர். அதற்கு தம்பி ராமையா சிரித்தபடி, ஆட்சிக்கு இப்பதானே வந்திருக்கிறார்.... காலம் பதில் சொல்லும். எல்லாரும் கவனிச்சுட்டு தான் இருக்கிறார்கள், நல்லபடியா எல்லாம் நடக்கணும். இது புது ஆட்சி, அண்ணன் செங்கோட்டையனை தவிர மத்த எல்லாருமே புதுசா இருக்காங்க. அதனால அவங்களுடைய ஆட்சி எப்படி இருக்கிறது என பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.நடிகர் தம்பி ரமையா பேட்டி
தேவா பற்றி உருக்கம்
சிவகுமார் சொன்ன வார்த்தை
எம்ஜிஆர் உடன் விஜய் ஒப்பீடு