சென்னை: நடிகை சமந்தா டிவி நிகழ்ச்சி ஒன்றில் எனக்கு பிடித்த ஹீரோ விஜய் சார்தான் என்று சொன்னதும், அருகில் இருந்த ஜூலியின் ரியாக்ஷனை வைத்து தான் இப்போது சோஷியல் மீடியாவில் பெரிய விவாதமே போய்க்கொண்டிருக்கிறது. சமந்தா விஜய்யைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருக்க, ஜூலி எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள், பழைய விஷயங்களை எல்லாம் நினைவுபடுத்தி ஜூலியின் ரியாக்ஷனை வைத்து மீம்ஸும், கமெண்ட்ஸும் போட்டு வருகின்றனர்.
விஜய் பற்றி சமந்தா பேச்சு
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டபோது, அவரிடம் பிடித்த ஹீரோ யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், சந்தேகமே வேண்டாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் தான், அவருடன் 3 வெற்றி படங்களில் நடித்திருக்கிறேன். விஜய் எனக்கு ஒரு லக்கி சார்ம், அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் என்றும் சமந்தா பேசிக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராக இருந்தவர், இப்போது தலைவராகவும் அரசை நடத்தும் பொறுப்பிலும் இருப்பதைப் பற்றியும் அவர் பேசியிருக்கிறார்.
சமந்தா இப்படி பேசும்போது கேமரா ஜூலியின் பக்கம் திரும்பியது. கருப்பன் குசும்புக்காரன் என்று ஒரு காமெடி வருவது போல, இந்த கேமரா மேனுக்கு ஜுலி மேல என்னதான் கோபமோ தெரியவில்லை, கேமராவை அவருக்கு போகஸ் வைத்து விட்டார். ஆனால் அப்போது ஜூலி அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தார். அவருடைய அந்த ரியாக்ஷன்தான் இப்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ஜூலியை பொறுத்தவரை, விஜய் ரசிகர்களுடன் அவருக்கு ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பல முறை கருத்து மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து பேசிய வீடியோக்களையும் அவர் வெளியிட்டிருந்தார். குறிப்பாக, விஜய்யின் தேர்தல் பிரசார பேச்சுகள் குறித்தும், விஜய் சொன்ன குட்டி ஸ்டோரிஸ் எல்லாம் பதில் வீடியோ வெளியிட்டு தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார். அந்த சமயத்தில் ஜூலியின் கருத்துகளுக்கு விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவருக்கும் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் நடந்தன. இந்த பழைய பின்னணியைத்தான் இப்போது ரசிகர்கள் மீண்டும் நினைவுபடுத்தி வருகின்றனர். அன்று விஜய்யை பற்றி விமர்சித்து பேசிய ஜூலி, இன்று சமந்தா அவரை புகழ்ந்து பேசும்போது அமைதியாக சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்து, ஜூலி உண்மையிலேயே மாறிவிட்டாரா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சிலரோ, ஒரு நிகழ்ச்சியில் இருக்கும்போது மற்றவர்கள் பேசுவதற்கு ஏற்றபடி அமைதியாக இருப்பது இயல்பான விஷயம்தானே, இதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். ஜூலி சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் தனக்கு கர்ப்பம் கலந்து விட்டது, அதற்கு காரணம் தான் மனதளவில் பாதிக்கப்பட்டது தான், தவெக தொண்டர்கள் தொடர்ந்து தனக்கு தொந்தரவு கொடுத்ததால் தான் எனக்கு கர்ப்பம் கலைந்து விட்டது என்று பேசி இருந்தார். அது பெரிதாக பேசப்பட்டது. ஆனால் இப்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இது குறித்து எந்த அறிவிப்பையும் அவர் சொல்லவில்லை. சமீபத்தில் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த போகும்போது ஜூலியை பார்த்தபிறகு தான் அவர் கர்ப்பமாக இருப்பதே பலருக்கு தெரிந்தது. அதற்கு பிறகு இப்போது அவர் தனியார் சமையல் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அங்கு தான் சமந்தா விஜயை பெருமையாக பேசி இருக்கிறார். இப்போது ரசிகர்கள் மத்தியில் இன்னொரு எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த வீடியோ வைரலாகி வருவதைப் பார்த்து ஜூலி ஏதாவது பதில் கொடுப்பாரா? விஜய் குறித்த தனது தற்போதைய கருத்தை வெளிப்படையாகச் சொல்வாரா? அல்லது இந்த விவகாரத்தைக் கடந்து செல்வாரா? என்பதுதான் பலருடைய கேள்வி.விஜய்யை விமர்சித்த ஜூலி
நடிகை சமந்தா- விஜே பிரியங்கா வாழ்க்கையில் இப்படி ஒரு ஒற்றுமையா? நெகிழ்ச்சி பதிவு
ஜூலி ரியாக்ஷன்
கதறி அழுத சமந்தா.. கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் என்ன ஆச்சு? ரசிகர்களை பதற வைத்த பதிவு
கர்ப்பமாக இருக்கும் ஜூலி