For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொஞ்சம் குழம்புங்க ப்ளீஸ்....!

By Staff
Google Oneindia Tamil News

விஞ்ஞான வளர்ச்சி, இருபதாம் நூற்றாண்டு என்பது மனிதனின் அடிப்படை வாழ்க்கைமுறையிலும் மட்டும் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. கலை என்கிற விஷயங்களும்,நவீன வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை தயார் படுத்திக் கொண்டே வருகின்றது.

இண்டியா இன்ஃபோ.காம் தமிழ் செய்தித்தளத்தில் ஆர்ட காலரி பகுதிக்காக ஓவியர்ஆதிமூலத்தை நாம் சந்திக்க, அவர் சொன்னதுதான் மேலே உள்ள விஷயங்கள்.மகாபலிபுரம் சாலையில், ஆர்ட்டிஸ்ட் வில்லேஜூக்கு மிக அருகாமையில் தோப்புசூழ்ந்த அமைதியான, அவரது இல்லத்தில் ஆதிமூலத்தை சந்தித்தோம்.

Art Picture 2கலை, ஓவியம் என்று உணர்ச்சிபூர்வமாக அவர் பேசியது, அவரது ஓவியத்தைப்போலவே ஆழமான சிந்தனைகளை தூண்டிவிடுவதாகவே இருக்கிறது. ஓவியன்என்பவனுக்கு உலகளாவிய பார்வை வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

உண்மைதானே. நேற்று இருந்த உலகம் இன்று இல்லை. வானுயரக் கட்டிடங்கள்,கம்ப்யூட்டரில் கடிதத் தொடர்பு, காலம் என்பது நொடிகளில் கூட முக்கியமாகஇருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேஇருக்கிறது. பல நாடுகளும் தங்களிடம் உள்ள விஞ்ஞான கண்டுபிடிப்புகளை மற்றநாடுகளுடன் பகிர்ந்து கொள்கின்றன. இதே விஷயம் தான் ஓவியத்துறையில்இப்பொழுது நடந்து வருகின்றது.

Art Picture 3புகைப்படம்போல அச்சுசிதறாமல்,வர்ணம் தீட்டி கிட்டத்தட்ட சிற்பங்களைப்போலவே படங்கள் வரைவதுதான் நமது இந்தியபாரம்பரியம், இது அற்புதமான வரைவதற்கு மிக கஷ்டமான ஓவியங்கள்தான். பலநூறு ஆண்டுகளாக இதே மாதிரியான ஓவியங்கள்தான் இதில் கொஞ்சம் மாறுதல்கள்தேவை., அது மட்டுமல்ல ஓவியம் என்கிற ஒரு நல்ல கலை ஏன் இவ்வளவு சீரியஸாகஇருக்க வேண்டும்.

சற்று ரிலாகஸ்டாக, உலகளாவிய பார்வையில் சற்று யோசித்து பயன்படுத்தாலேமே!இது ஓவியத்தில் மட்டுமல்ல, இப்பொழுது இசையை எடுத்துக் கொள்ளுங்கள்,கர்னாட்டிக் இசையுடன் வெஸ்டர்ன் இசை சேர்ந்து ஒரு புதிய இசை கிடைத்திருக்கிறது.இதே மாதிரிதான் ஓவியங்களும் வெஸ்டர்ன் ஓவியங்களுடன் மிக்ஸ் பண்ணிவரைவதால் ஒரு புதிய கோணம் கிடைக்கிறது.

நீங்கள் வரைந்த காந்தி ஓவியங்கள் உங்களுக்கு ஒரு தனி முத்திரையைபதித்திருக்கிறது. அந்த காந்தி ஓவியங்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X