For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பரதம்

By Staff
Google Oneindia Tamil News

பரத நாட்டியத்தில் பல அம்சங்கள் உள்ளன. அவை இல்லாமல் பரதம் முழுமை பெறாது. ஆனால் இப்போதைய கம்ப்யூட்டர் உலகில் எல்லாமேவேகம் என்றாகி விட்டது. அதனால், சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை ஒதுக்கி விடுகிறார்கள்.

பரதநாட்டியத்தின் ஐட்டங்கள் (Repertoire) என்று தஞ்சாவூர் நால்வர் (சின்னையா,பொன்னையா, சிவானந்தம், வடிவேலு) ஏற்படுத்தி வைத்தவற்றை இங்கு பார்ப்போம்.

அலாரிப்பு:

அலாரிப்பு என்பது தெலுங்கு வார்த்தை. இதற்கு பூரிப்பு, பூத்தல் என்று பொருள்கொள்ளலாம். கத்துக் குட்டி டான்ஸர்கள் கற்றுக் கொள்ளும் முதல் ஐட்டம் இதுதான்.தங்களை முழு நடனத்திற்குத் தயார்படுத்திக் கொள்ள அலாரிப்பு ஒரு டான்ஸருக்குஉதவுகிறது. கிட்டத்தட்ட வார்ம்-அப் மாதிரி. அலாரிப்பைச் செய்து விட்டால், அடுத்துவரும் கடினமான ஐட்டங்களைக் கூட எளிதாக செய்யும் ஆர்வம் கிடைக்கும்.

அலாரிப்பின்போது டான்ஸருடைய உடலின் அவயங்கள் அனைத்தும் அசைந்துகொடுக்கின்றன. கண்கள், தோள்கள், கைகள் என மொத்த உடலே அசைகிறது.அலாரிப்பின் முடிவில் ஒரு கோர்வை வருகிறது. இத்துடன் அலாரிப்பு நிறைவுபெறுகிறது. நாட்டியத்தின் துவக்கம்தான் அலாரிப்பு.

ஜதிஸ்வரம்:

விருத்தங்களால் ஆனது ஜதிஸ்வரம். ஒரு ஜதிஸ்வரத்தை எடுத்துக் கொண்டால் அதில்பல கோர்வைகள் இருக்கும். ஜதிஸ்வரத்தில் வரும் முதல் கோர்வைக்கு தீர்மானம்என்று பெயர். கோர்வைகள் எனப்படுவது ஸ்வர வரிசைகளை உருவாக்குவது. பலஅடவுகள் சேர்ந்ததுதான் கோர்வை.

ஒவ்வொரு கோர்வையும், மை அடவினால் ஆனதாக இருக்கும். ஜதிஸ்வரத்தில்வெறும் நடனம் மட்டுமே இருக்கும். அபிநயம் இருக்காது.

ஸப்தம்:

இப்போதுதான் ஒரு டான்ஸர், அபிநயத்தின் பக்கம் வருகிறார். ஸப்தம் என்ற இந்தஐட்டத்தில்தான் அபிநயம் அறிமுகமாகிறது. எளிமையான சாஹித்யங்களால் ஆனதுஸப்தம். எளிமையான கோர்வைகளால் இது பிரிக்கப்பட்டிருக்கும். கிருஷ்ணரைவாழ்த்திப் பாடுகையில் இந்த ஸப்தம் வழக்கமாகப் பயன்படுத்தப்படும். மிஸ்ர சப்புதாளத்தில் இது அமைந்திருக்கும்.

வர்ணம்:

பரதநாட்டிய ஐட்டங்களில் மையத்தில் வருவது வர்ணம். கர்நாடக இசையைப்பொருத்தவரை, இரண்டு வகை வர்ணங்கள் உள்ளன.அவை பாத வர்ணம், தான வர்ணம்.

தான வர்ணம் வழக்கமாக நடன வடிவமைப்பில் பயன்படுத்தப்படும். தீர்மானத்துடன்இது ஆரம்பிக்கும். திரிகால ஜதி எனப்படும் மூன்று வகை வேகத்தில் இது இருக்கும்.முதல் பாதியில், சாஹித்யங்களின் ஒவ்வொரு வரியும், கடினமான ஒன்று அல்லதுஇரண்டு தீர்மானங்களால் அமைந்திருக்கும். இதை நட்டுவனார்கள் பாடுவார்கள்.

இரண்டாவது பாதியில், சரணத்திலிருந்து வேகம் பிடிக்கும். சரண ஸ்வரங்கள்கோர்வைகளால் ஆனதாக இருக்கும். தொடர்ந்து வரும் சாஹித்யம் அபிநயத்தைவெளிப்படுத்த பாடப்படும்.

பரதநாட்டியத்தில் மிகவும் முக்கியமானது வர்ணம். கடினமான ஜதிகள்,அபிநயங்களால் ஆனதுதான் வர்ணம். ஒரு டான்ஸரின் உண்மையான திறமையைவெளிக் கொணர வர்ணம்தான் உதவும்.

முந்தைய பகுதிகள்:1234
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X