பாரதி பக்கம்
100 சதவீதம் வாஸ்தவமானது இந்த வார்த்தை. ஆனால் கஜுரஹோவிற்குச் சென்றால்இது தவறோ என்ற உணர்வு உங்களுக்குள் உதிக்கும்.
மத்திய பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சின்னஞ் சிறு கிராமம் கஜுரஹோ.கலை நயத்துடன் கூடிய காதல் களியாட்டங்களை இங்கு காணலாம்.
காதலும், காமமும் இணைந்து கலையுடன் கைகோர்த்து சிலைகளாக நிற்கின்றன இங்கு.சிற்பங்களா அல்லது சிலிர்க்க வைக்கும் நிஜங்களின் நிழல்களா என்று யோசிக்கவைக்கும் கஜுரஹோ சிற்பங்கள்.
ஒவ்வொரு சிற்பமும், ஆய கலைகளின் ஒரு வடிவத்தை விளக்குகிறது. செக்ஸ்என்றால் என்ன என்று தெரியாத ஒருவரை இங்கு கொண்டு வந்து விட்டால் திரும்பிவரும்போது "தெளிவாக இருப்பார்.
ஒப்பிட முடியாத அருமையான கலையை தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டுள்ளனகஜுரஹோ சிற்பங்கள். இங்கு கோவில்கள் அதிகம். கோவில்களில் சிற்பங்களும்அதிகம்.
கஜுரஹோ சிற்பங்கள் பிற கோவில்களின் சிற்பங்களிலிருந்து வேறுபடுகின்றன.கோவில் சுவர்களில் வரையப்பட்டுள்ள படங்கள், கோவில்களின் வெளிச் சுவர்களில்நிறைந்து கிடக்கும் சிற்பங்கள் பார்க்கும் விழிகளுக்குப் பரவசம் அளிக்கும்.
செக்ஸ் குறித்த அத்தனை உணர்வுகளையும் இந்த சிற்பங்கள் பிரதிபலிக்கின்றன.அக்காலத்திய சிற்பங்களாக இருந்தாலும் இன்றும் கூட உயிர்ப்புடன் இவை உள்ளது,அன்றைய சிற்பக்கலை எவ்வளவு சிறப்பாக இருந்துள்ளது என்பதை உணர்த்துகிறது.
கஜுரஹோ முழுவதும் இருக்கும் கோவில்களில் காணப்படும் இந்த அற்புத, அரியசிற்பங்கள் இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டுள்ளன. சரியான பராமரிப்புஇல்லாததால், பல சிற்பங்கள் சிதைந்து வருகின்றன. காலம் வந்து அதை முற்றிலும்இல்லாமல் செய்து விடுவதற்கு முன்பு அவற்றைக் காக்கும் பொருட்டு மராமத்துப்பணிகளை மேற்கொள்ள மத்திய பிரதேச அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மழை நீர், பூஞ்சைகள்,சுற்றுலாப் பயணிகள் செய்யும் அசுத்தம் ஆகியவற்றால்கஜுரஹோ சிற்பங்கள் பாழ்பட்டு வருகின்றன என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பல சிற்பங்கள் தங்களது வடிவத்தை இழந்து விட்டன.
அமிலங்கள் படுவதாலும் சிற்பங்கள் சிதைகின்றன. இதனால் கடுமையான பாதிப்புஏற்படும் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கஜுரஹோவின் வரலாற்றுப் பின்னணி மிகப் பெரியது. இந்த பின்னணி கெடாமல்மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சவால் தொல் பொருள் ஆராய்ச்சித்துறைக்கு உள்ளது.
பல கோவில்களின் கீழ்த் தளங்கள் தகர்ந்து போயுள்ளன. இவற்றை உடனியாக சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு வந்துவிடும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தென் கிழக்கு பகுதியிலுள்ள லட்சுமணர் கோவில் அதிக பாதிப்புகளைக் கொண்டகோவிலாக உள்ளது. மிகப் பெரிய கோவிலான லட்சுமணர் கோவிலில்ஆயிரக்கணக்கான சிற்பங்கள் உள்ளன.
கஜுரஹோவிலுள்ள கோவில்கள் அனைத்திலும் வெளிப்புறங்களில் வேலிகள்அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், சிற்பங்களை யாரும் தொடாமல் பார்க்க வழிஏற்படும். தொடுதலின் மூலமும் வேதி மாற்றம் நிகழ்ந்து சிற்பங்களுக்குச் சிதைவுஏற்படும்.
கஜுரஹோவைச் சுற்றிலும் உள்ள கிராமங்களின் பஞ்சாயத்துத் தலைவர்கள் அடிக்கடிகூட்டம் போட்டு கஜுரஹோவைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்துகூறுகின்றனர். இந்தப் பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்களும்ஈடுபடுத்தப்படுகின்றனர்.
காதல் கற்றுத் தரும் பள்ளியான கஜுரஹோ சிற்பங்களைப் பாதுக்காக வேண்டியதுநமது கடமை. இல்லாவிட்டால், அருமையான கலைப் பொக்கிஷத்தை காலத்திற்குக்காவு கொடுத்த அவப் பெயர் நம்மை வந்து சேரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications