For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

அந்திப் பொழுது

காவென்று கதிதடுங் காக்கை - என்றன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை,
மேவிப் பலகிளை மீதில் - இங்கு
விண்ணிடை அந்தப் பொழிதினைக் கண்டே,
கூவித் திரியும் சிலவே - சில
கூட்டங்கள் கூடித் திசைதோறும் போகும்.
தேவி பராசக்தி யன்னை - விண்ணிற்
செவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள். (1)


தென்னை மரக்கிளை மீதில் - அங்கோர்
செல்லப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்.
சின்னஞ்சிறிய குருவி - அது
ஜிவ் வென்று விண்ணிடை யூசலிட் டேகும்.
மன்னப் பருந்தொ ரிரண்டு - மெல்ல
வட்ட மிட்டுப் பின் நெடுந்தொலை போகும்.
பின்னர் தெரிவிலொர் சேவல் - அதன்
பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும். (2)


செவ்வொளி வானில் மறைந்தே - இளந்
தேன்நில வெங்கும் பொழிந்தது கண்டீர்!
இவ்வள வான பொழுதில் - அவள்
ஏறிவந்தே யுச்சி மாடத்தின் மீது
கொவ்வை யிதழ்நகை வீச - விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தாள்.
செவ்விது, செவ்விது,பெண்மை - ஆ!
செவ்விது, செவ்விது, செவ்விது காதல்! (3)

(தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X