பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 06, 2001
6.
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மய்லுறுத்துகின்ற
இனிய வாசனையுடன் வா.
இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.
காற்றே வா.
எமது உயிர் நெருப்பை நீடித்து நின்று நல்லொளி தருமாறு
நன்றாக வீசு.
சக்தி குறைந்து போய், அதனை அவித்துவிடாதே.
பேய்போல வீசி, அதனை மடித்துவிடாதே.
மெதுவாக நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக்
கொண்டிரு.
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபுடுகின்றோம்.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
