பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஆகஸ்டு 15, 2001

Subramaniya Bharathi

கண்ணன் என் காதலன் - 1

ராகம்: செஞ்சுருட்டி

தாளம்: ஏக தாளம்

(தொடர்ச்சி)
கனவு கண்டதிலே - ஒரு நாள்
கண்ணுக்கு தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை - எவனோ
என்னகந் தொட்டுவிட்டான்:
வினவக் கண் விழித்தேன்: - சகியே!
மேனி மறைந்து விட்டான்:
மனதில் மட்டிலும் புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ! (5)

உச்சி குளிர்ந்ததடீ! - சகியே
உடம்பு நேராச்சு.
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ! -எதிலும்
இன்பம் விளைந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! சகியே!
அழகு வந்தததடீ! (6)

எண்ணும் பொழுதிலெல்லாம் - அவன்கை
இட்ட விடத்தினி லே
தண்ணென் றிருந்ததடீ! - புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெணிப் பார்த்தேன்- அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ! (7)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+