பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 17, 2001
2. சக்தி
2
ஞாயிறு வையக மாகிய கழனியில் வயிர வொளியாகிய நீர்
பாய்ச்சுகிறது.
அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன.
அஃது மேகங்களை ஊடுறுவிச் செல்லுகின்றன.
மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புலனை வடிகட்டும்
போது மண்டி கீழும், தெளிவு மேலுமாக நிற்கின்றன.
கோழி கூவுகிறது.
எறும்பு ஊர்ந்து செல்லுகிறது.
ஈ பறக்கின்றது,
இளைஞன் சித்திரத்திலே கருத்துச் செலுத்துகிறான்.
இவையனைத்தும் மஹா சக்தியின் தொழில்
அவள் நம்மைக் கர்ம யோகத்தில் நாட்டுக,
ரணமுள்ள செய்கை. சலிப்பில்லாத செய்கை
விளையும் செய்கை, பரவும் செய்கை,
கூடிவரும் செய்கை, இறுதியற்ற செய்கை,
நமக்கு மஹாசக்தி அருள் செய்க.
கவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல்,
மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல்-
இச் செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள் புரிக.
அன்புநீர் பாய்ச்சி, அறிவென்னும் ஏருழுது,
சாத்திரக் களைபோக்கி, வேதப் பயிர் செய்து,
இன்பப் பயனறிந்து தின்பதற்கு மஹாசக்தி.யின் துனை
அதனை அவள் தருக.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
