பாரதி பக்கம்
மே 19, 2001
4
வானத்திலே வேலி போடலாமா?
என்றான் ராமகிருஷ்ண முனி,
ஜடத்தைக் கட்டலாம், சக்தியைக் கட்டலாமா?
உடலைக் கட்டலாம், உ.யிரைக் கட்டலாமா?
உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம்.
என்னிடத்தே சக்தி எனதுயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள்.
சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும்.
தொடக்கமும் முடிவுமில்லாத காலத்திலே நிமிஷந்தோறும்
அவளுக்குப் புதிய கோயில்கள் வேண்டும்.
இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு நான் என்று
பெயர்.
இதனை ஓயாமல் புதுப்பித்துக் கொண்டிருந்தால் சக்தி இதில்
இருப்பாள்.
இது பழமைப்பட்டுப் போனவுடன், இதை விட்டு விடுவாள்.
இப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கிறாள்.
இப்போது எனதுயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன.
இப்போது எனதுடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன.
இப்போது என்னுள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது.
இது எனக்குப் போதும்.
சென்றது கருத மாட்டேன், நாளைச் சேர்வது நினைக்க மாட்டேன்.
இப்போது என்னுள்ளே சக்தி கொலுவீற்றிருக்கின்றான்.
அவள் நீடூழி வாழ்க.
அவளைப் போற்றுகின்றேன், புகழ்கின்றேன், வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன்.
DVD


Click it and Unblock the Notifications
