பாரதி பக்கம்
மே 21, 2001
6
இனிய இசை சோகமுடையது என்பது கேட்டுள்ளோம்.
ஆனால், இப் பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனிய
தாயினும் சோக ரஸந் தவிர்த்தது.
இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பது போலிருக்கின்றது.
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை
அடுக்கிக் கொண்டு போவது போலிருக்கிறது.
இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?
தான தந்தத் தான தந்தத் தா - தனந
தான தந்தன தான தந்தன நா-
தந்தனத்தத்தன தந்தனத்தத்தன நா
அவ்விதமாகப் பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக
வாசித்துக் கொண்டு போகிறான் .இதற்குப் பொருளென்ன?
ஒருகுழந்தை இதற்குப் பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று.
காளிக்குப் பூச்சூட்டினேன்: அதைக்
கழுதை யொன்று தின்ன வந்ததே
பராசக்தியின் பொருட்டு இவ்வுடல் கட்டினேன்.
அதை பாவத்தால் விளைந்த நோய் தின்ன வந்தது.
பராசக்தியைச் சரணடைந்தேன்.
நோய் மறைந்து விட்டது.
பராசக்தி ஒளியேறி என் அகத்திலே விளங்கலாயினள்
அவள் வாழ்க.
DVD


Click it and Unblock the Notifications
