பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 22, 2001
வாழ்க திலகர் நாமம்!
வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!
வீழ்க கொடுங் கோன்மை! வீழ்க! வீழ்கவே!
சரணங்கள்
1. நாலு திசையும் ஸ்வாதந் தர்ய நாதம் எழுகவே!
நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!
ஏலு மனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே
எந்த நாளும் உலக மிதில் அச்சம் ஒழிகவே! (வாழ்க)
2. கல்வி யென்னும் வலிமை கொண்ட
கோட்டை கட்டினான் - நல்ல
கருத்தினா லதனைச் சூழ்ந்தோர்
அகழி வெட்டினான்
சொல்விளக்க மென்ற தனிமைக்
கோயி லாக்கினான்
ஸ்வாதந் தர்யமென்ற தன்மேற்
கொடியைத் தூக்கினான். (வாழ்க)
3. துன்ப மென்னும் கடலைக் கடக்குந்
தோணி யவன்பெயர்
சோர்வென்னும் பேயை யோட்டுஞ்
சூழ்ச்சி யவன்பெயர்
அன் பெனுந்தேன் ஊற்றி ததும்பும்
புதுமலர் அவன்பேர்
ஆண்மை யென்னும் பொருளைக் காட்டும்
அறிகுறி யவன்பேர். (வாழ்க)
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
