பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 23, 2001
சர்வ மத சமரசம்
(தொடர்ச்சி)
பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கை யாலே:
தேராத மானுடர் தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா:
காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டா
:கால்வாய்கள்பாய்ச்சுவதில் கலகம் வேண்டா:
சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு:
சிவன் செத்தா லன்றிமண்மேல் செழுமை உண்டு. (61)
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்!
பேதமிட்டுக் கலகமிட்டு வேளி கட்டிப்
பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு
நீதமில்லாக் கள்வர்நெறி யாயிற் றப்பா!
நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சியன்றோ?
பாதமலர் காட்டிநினை அன்னை காத்தாள்:
பாரினிலித் தருமம்நீ பகருவாயே. (62)
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
