பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 23, 2001
8.
இவள் எப்படி உண்டாயினள்! அதுதான் தெரியவில்லை.
இவள்தானே பிறந்த தாய், தான் என்ற பரம்பொருளிடத்தே.
இவள் எதிலிருந்து தோன்றினாள்! தான் என்ற
பரம்பொருளிலிருந்து எப்படித் தோன்றினாள்! தெரியாது.
படைப்பு நமது கண்ணுக்கு தெரியாது: அறிவுக்கும்
தெரியாது.
சாவு நமது கண்ணுக்குத் தெரியும்: அறிவுக்குத் தெரியாது.
வாழக்கை நமது கண்ணுக்குத் தெரியும்: அறிவுக்கும்
தெரியும்: வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்: இதன்
பயன் இன்பமெய்தல்.
உள்ளம் தெளிந்திருக்க உயிர் வேகமும் சூடும் உடையதாக:
உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க.
மஹாசக்தியின் அருள் பெறுதலே வாழ்தல்: நாம் வாழ்கின்றோம்.
நம்மை வாழ்வுறச் செய்த மஹாசக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம்.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
