பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 24, 2001
சர்வ மத சமரசம்
(தொடர்ச்சி)
ஒருமொழியே பலமொழிக்கும் ஒழிக்கும் என்ற
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒருமொழி ஓம் நம்ச்சிவாய வென்பர்
ஹரிஹரி யென் றிடினும் அஃதே, ராம ராம
சிவசிவ வென்றிட்டாலும் அஃதேயாகும்.
தெரிவுறுதலே ஓம்சக்தி யென்று மேலோர்
ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும். (63)
சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்:
சஞ்சலங்கள் இனிவேண்டா: சரதந் தெய்வம்:
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்:
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்:
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்:
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும். (64)
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
