பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 24, 2001
3. காற்று
1.
தென்னாலை.
குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்டி , மேலே தென்னங் கிடுடுகளை விரித்திருக்கிறது.
ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது.
ஒரு சாண் கயிறு.
இந்தக்கயிறு, ஒரு நாள் சுகமாக ஊசலாடித் கொண்டிருந்ததது.
பார்த்தால் ஒரு துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.
சில சமயங்களில் அசையாமல் உம் மென்றிருக்கும்.
கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.
இன்று அப்படியில்லை. குஷால் வழியி லிருந்தது,
எனக்கு ம் இந்தக் கயிறுக்கும் சிநேகம். நாங்கள் அடிக்கடி,
வார்த்தை சொல்லிக்கொள்வதுண்டு.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
