சுப்பு ஆறுமுகத்துக்கு ராஜா சர் விருது
செப்டம்பர் 24, 2004
சுப்பு ஆறுமுகத்துக்கு ராஜா சர் விருது
சென்னை:
2004ம் ஆண்டுக்கான ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை விருது வில்லிசைக் கலைஞர்சுப்பு ஆறுமுகத்துக்கு வழங்கப்படுகிறது.
வரும் 30ம் தேதி சென்னை ராணி சீதை மன்றத்தில் நடைபெறும் ராஜா சர் அண்ணாலைச் செட்டியார் 124வதுபிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் இந்த விருதை வழங்குகிறார்.
தமிழிசை வளர்ச்சிக்கு இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கமும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படுகிறது.
நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம், வில்லிசை ராமாயணம், வில்லிசை மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு நூல்களைசுப்பு ஆறுமுகம் எழுதியுள்ளார்.
ம.ரா.போ. குருசாமிக்கு தினத்தந்தி விருது:
2004ம் ஆண்டுக்கான மூத்த தமிழறிஞர் விருதையும், இலக்கியப் பரிசையும் தினந்தந்தி அறிவித்துள்ளது.
தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளில் வருடந்தோறும் மூத்த தமிழறிஞர் விருதும், இலக்கியப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ம.ரா.போ. குருசாமிக்கு மூத்த தமிழறிஞர் விருது வழங்கப்படுகிறது.இவ் விருதுடன் வெள்ளிப் பட்டயத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.
ரூ.50,000 மதிப்புள்ள இலக்கியப் பரிசை கவிஞர் பொன்னடியான், பொன்னடியான் கவிதைகள் என்ற நூலுக்காகபெறுகிறார். வரும் 27-ம் தேதி ராணி சீதை மன்றத்தில் நடைபெறும் சி.பா. ஆதித்தனாரின் நூற்றாண்டுத் தொடக்கவிழாவில் இந்த விருதுகளை சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தியாகராசன் வழங்குகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications