• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவசர உதவி

By Staff
|

ஒரு அவசர உதவி என்றால் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பதை நாம் அமெரிக்கர்களிடமிருந்து கற்றுணர வேண்டும். ஒருஅவசரம் என்றால் தாய்மார்கள் 911 என்ற எண்ணை அடித்தால் போதும், அலறிப் புடைத்துக் கொண்டு எமர்ஜென்சி வண்டி "ஊய்" என்றுஊளையிட்டுக் கொண்டு வருவதும், அனைத்து வண்டிகளும் அதற்கு வழி விட்டுக் கொடுக்கும் பாங்கும், அனைவரையும் கவர்வன.

Police Carஎனது வீட்டின் அருகே நண்பர் வீட்டில் சேட்டை மிக்க ஒரு குழந்தை தலையில் அடி பட்டு விட்டது. அழைத்தவுடன் 5 நிமிடங்களில் வந்தவண்டியினர் விசாரித்த பாங்கு நாகரீகத்தின் வளர்ச்சியடைந்த தன்மையினைக் காட்டியது. குழந்தைக்கு அதிகம் பாதிப்பு இல்லை என்றுதெரிந்தாலும் அருகே இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு வண்டியில் இருந்த பெண் கூறினாள்.

அவளுக்கே 20 வயது தான்இருக்க வேண்டும். நான் அவள் நகராட்சி அல்லது மருத்துவ மனையைச் சேர்ந்தவளோ என்று நினைந்தேன். ஆனால் அவளோ ஒருதிணிடூதணணாஞுஞுணூ. தனது நேரத்தினை நகரத்திற்காக செலவழிக்கிறாள். வண்டியும், அதன் செலவுகளும் நகரத்தினுடையது. ஆனால் சுய லாபம்கருதாமல் வேலை பார்ப்பது அந்த நகரத்தின் ஒரு பிரதி. அவள் வயதோ 20. இது சென்னை மாநகரத்திற்கு ஒரு பாடமாகும்.

சமீபத்தில் அமெரிக்கா ப்ளோரிடா மாகாணத்தில் கடும் புயல்கள் தாக்கியது நினைவிருக்கலாம். அங்கும் இயற்கையின் சீற்றத்திற்கு மனிதன்பயப்பட வேண்டியிருந்தது. ஆனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி அவனும் அவன் அரசாங்கமும் எடுத்த முயற்சிகள் பிரமிக்கவைக்கின்றன. புயல் வீசும் 1 வாரம் முன்பாகவே ரேடியோ, டி.வி.களில், இணைய தளங்களில் அதன் வேகம், தன்மை, சுற்றளவு, எங்குத்தரையினைக் கடக்கும் என்பதைப் பற்றி பறைசாற்றிக் கொண்டிருந்தனர். திரும்ப, திரும்ப நம்மை யாராவது பயப்படுத்திக் கொண்டிருந்தால்,நாமும் சற்றுக் கலவரப்பட்டு நம்மை இன்னும் உஷார் நிலையில் வைத்திருப்போம். இதனால் பொருட்சேதமும் பெருமளவில்தவிர்க்கப்படுகின்றது.

இந்தியாவில் விவரமில்லாத வானிலை அறிக்கைகளும், கடைசி நிமிட ஏற்பாடுகளும் தான் மக்களுக்கு கிட்டுகின்றது. ரேடார் போன்றதொழில் நுட்பங்கள் இருந்தாலும் அது தொலைக்காட்சியினரிடமும், மற்றும் பல பரவலான அவசர உதவியாளரிடமும் இருந்தால் தான்எங்கு எவ்வாறு வானிலை இருக்கின்றது என்று தெரியும். இன்சாட் மூலமாக வெளியிடப்படும் ஒரு கருப்பு வெள்ளைப் படமும்,விவரமில்லாத 3 வரி அறிக்கைகளும் பயன் தாரா. இது ஒரு 24 மணி நேர வேலை. இணைய தளங்கள் இதில் பெரும் பங்காற்ற வேண்டும்.தனித் தொலைக்காட்சியினர் இதில் முதலீடு செய்து மக்களுக்கு அரும்பங்காற்ற வேண்டும். மழை நீர் எவ்வளவு தேங்கும், என்றவிவரங்களை மக்கள் தொடர்பு அதிகாரிகள் செவ்வனே புயல் காலத்தில் சொல்ல வேண்டும்.

இ சாடிலைட் படங்களைப் பார்க்கின்ற கண்களுக்கு, சன் டிவி, மற்றும் இதர டிவிகளின் வானிலை அறிக்கைகள் மிகக்குழந்தைத்தனமாகவும், பத்தாம் பசலித்தனமாகவும் படுகின்றது. இந்த இன்சாட் புகைப்படத்தினை நான் 15 வருடமாகப் பார்க்கிறேன். ஒருமுன்னேற்றமும் இல்லை. அனிமேஷனுடன் ஓடும் மேகங்கள், புயலின் கண் எங்கு இருக்கின்றது ?. எவ்வளவு நேரத்தில்நாகைப்பட்டனத்தின் ஒரு பகுதியைக் கடக்கும் ? போன்ற விவரங்கள் என்பதெல்லாம் தெரியாது. கன்யாகுமரியில் இருப்பவனுக்குசென்னை நகரத்து மிக அதிக தட்ப வெப்பம் தெரிந்து என்ன லாபம் ?. சென்னையில் எங்கு நிலத்தடி நீர் எவ்வளவு தூரத்தில் கிடைக்கும்போன்ற விவரங்களும் கிடைக்காது.

பல கோடிச் சொத்துக்களை நஷ்டப்படுத்தும் புயல், மழை, வறட்சி, பூகம்பம் முதலியவற்றை ஆராய சில லட்சங்கள் போட்டு கம்ப்யூட்டர்மூலமாக ஆராய்ந்து அதன் பயனை மக்களிடையே கொண்டு செலுத்தல் வேண்டும். திறமை அனைத்தும் சென்னையில் சர்வதேசளவில்இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உழைப்பதில் முடிவடைகின்றது. அவற்றை நமக்குப் பயன்படும் தொழில்நுட்பங்களைப் பெருக்கதிசைத் திருப்ப வேண்டும்.

நம்மிடம் விவரமறிந்த மக்கள் உள்ளனர். சேர்ந்து ஒரு கொள்கையோடு குறிக்கோளுடன் உழைப்பதில்லை. ஏதாவது பொது வேலைநிறுத்தமென்றால் வரிந்து கட்டிக் கொண்டு வரும் மக்கள், பொதுத் தொண்டு என்றால் கையைக் கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

பள்ளிகளும்,தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இவ்விஷயத்தில் பெரும் சேவையாற்றக் கடைமைப் பட்டிருக்கின்றனர். பொதுத் தொண்டு என்றால்இலவசமாக செய்யும் வேலைகள் அல்ல. நாம் கடைமயாற்றும் எதையும் பொதுமக்களின் நலம், உதவிகளுக்காக கருத்துடன் செயலாற்றவேண்டும்.

Kumbakonam Tragedyகும்பகோணத்தில் உயிரிழந்த குழந்தைகளை நினைத்துப் பார்க்க வேண்டும். தீ, புயல், வெள்ளம், மற்றும் கலவரங்கள் போது அவசர உதவிஎப்படி கிடைக்கும், எது கிடைக்காது என்று பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.படங்கள் வரைந்து அனைத்து பொது இடங்கள், பள்ளிகள், கோவில்கள், அலுவலகங்களிலும் விளக்க வேண்டும். அவசர உதவிக்கு ரிக்ஷா,ஆட்டோ, கார், வேன், சைக்கிள் என்று தயார் படுதிவைக்க வேண்டும். அந்த அந்த இடங்களில் பொருப்பானவர்களைத் அவசர உதவிஇயக்குனர்களாக தெரிவு செய்து அனைவருக்கும் தெரியப்படுத்தல் வேண்டும்.

அனைவருக்கும் வெளியேறும் வழிகளையும் தெரியப்படுத்த வேண்டும். சினிமா தியேட்டர்கள், கொட்டகைகள், பொதுக் கூடங்கள்முதலுதவி, அவசர உதவி ஆகியவற்றில் மிகக் கவனம் செலுத்தல் வேண்டும். அலுவலகங்களில் உள்ள லிப்ட்கள் சரியாக பராமரிப்புசெய்யும் விவரங்களை லிப்ட்டின் உள்ளே ஒட்டி வைக்க வேண்டும்.

பேருந்துகளில் அவசர வழிகளை அதிகப்படுத்தல் வேண்டும். உள்ளேயும், வெளியேயும் பேருந்து போகும் வழிகளில் உள்ள மருத்துவக்கூடங்களின் தொலைப்பேசி எண்ணை எழுதி வைக்க வேண்டும்.

பள்ளிக் கூடங்களின் கட்டங்கள் எவ்வளவு பழமையானது என்பதை ஒவ்வொரு பள்ளியும் எழுதி வைக்க வேண்டும். இல்லையென்றால்பெற்றோர்கள் பள்ளியில் வைக்கும் படி வற்புறுத்த வேண்டும். காலாவதியானக் கட்டடங்களை நாம் ஒதுக்கினால் தாமாகவே நமதுகுழந்தைகள் நல்ல எதிர்காலத்தில் வாழ்வார்கள். அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டே செய்யாமல் இருப்பது கிரிமினல் குற்றம்.இவ்வாறு இருந்தால், இந்தியா வளர்ந்த நாடு என்று பறைசாற்றிக் கொள்ள முடியாது. வளரவும் செய்யாது. நமக்குத் தடையாக இருப்பதுநாமே!

- கிருஷ்ணக்குமார்(kksash@aol.com)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X