• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதரச விஷத்தின் பிடியில் கொடைக்கானல்

By Staff
|

வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு இந்திய அரசு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுக்கிறது. உலகமயப் பொருளாதாரக்காலத்தில் நமது பொருளாதாரம் முன்னேறவும் வளம் பெறவும் வேறு வழியில்லை என்கிறார்கள். இந்த நிலைப்பாட்டுக்குபாரதிய ஜனதா, காங்கிரஸ் என்றெல்லாம் வேறுபாடு இல்லை. ஆனால், இந்தியாவுக்கு வருகை தரும் பன்னாட்டுக்கம்பெனிகள் என்ன செய்கின்றன என்பதற்கு கொடைக்கானலில் அமைக்கப்பட்ட தர்மாமீட்டர் தொழிற்சாலை நல்லஉதாரணமாக இருக்கிறது.

greenways

கொடைக்கானல் ஏரியில் Green peace அமைப்பு நடத்திய போராட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அழகான மலை நகரமான கொடைக்கானலும் அதன் சுற்றுச் சூழலும் பாதரசவிஷத்தின் பிடியில் சிக்கியுள்ளன. கொடைக்கானல் தொன்மையான வனங்களின் நிலமாகும். இங்கேயுள்ள வனங்களும், புல்வெளிகளும்அழியும் நிலையில் உள்ள பல்வேறு அரிய உயிரினங்களின் வாழிடமாக இருக்கின்றன. ஆனால், இந்த இயற்கையான. இனிமையானசூழலில் நஞ்சைக் கலக்கும் வேலையை பன்னாட்டுக் கம்பெனிகள் செய்துள்ளன. அத்தொழிலகம் ஏற்படுத்திய மாசு அதன்தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பத்தினைரையும் பாதித்துள்ளது மட்டுமல்லாமல் நிலம், நீர், காற்றில் பரவி கண்காணஇடங்களுக்கும் பரவி வருகிறது.

1983ல் அந்த அபாயம் தொடங்கியது. அமெரிக்காவில் நியூயார்க்கின் வாட்டர் டவுனில் செயல்பட்டுக்கொண்டிருந்ததெர்மாமீட்டர் தொழிற் சாலையொன்றை பாண்ட்ஸ் என்ற சர்வதேச கம்பெனி கொடைக்கானலுக்குக் கொண்டுவந்தது.பாதரசத்தைப் பயன்படுத்தி தெர்மாமீட்டர் தயாரிக்கும் வேலையை இத்தொழிற்சாலை துவங்கியது. இங்கே உற்பத்தி செய்யப்பட்டதர்மா மீட்டர்கள அமெரிக்கா வாங்கிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் தென்னமெரிக்க நாடுகளுக்கும்ஆஸ்திரேலியாவுக்கும் விற்றுவந்தது. இதற்கான பாதசரம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. பாதசரம் கொண்டகண்ணாடிகளை நொறுக்குவதும், பாதரசத்தைப் வடித்தெடுக்கும் பணியும் கூட தொழிற்சாலையால் மேற்கொள்ளப்பட்டன.இத்தொழிற்சாலையின் நிர்வாகத்தை இந்துஸ்தான் லீவர் கம்பெனி 1998 முதல் மேற்கொண்டது. இந்துஸ்தான் லீவர் இங்கிலாந்-துபன்னாட்டுக் கம்பெனியான யூனிலிவரின் துணை நிறுவனமாகும். 2001 மார்ச்சில் தொழிற்சாலை மூடப்படும் வரை இந்துஸ்தான்லீவரே நிர்வகித்து நடத்தி வந்தது.

HLL

HLL சின்னத்துடன் உள்ள பிரச்சாரப் படம்

ஆலையில் பணிசெய்த தொழிலாளர்களுக்கு பாதரசத்தின் நச்சுத் தன்மை பற்றியோ அதனைக் கையாளும்போது மேற்கொள்ள வேண்டியநெறிமுறைகள் பற்றியோ நிர்வாகம் எந்தவித பயிற்சியும், எச்சரிக்கையும் கொடுக்கவில்லை. பாதரச நச்சின் தாக்கம் என்னவிளைவுகள ஏற்படுத்தும் என்பது பற்றி அவர்களுக்கு எந்த விபரமும் தெரியாதிருந்தது.
தர்மாமீட்டரில் பாதரசம் அதன் உலோக வடிவத்தில் பயன்படுத்தப்பகிறது. திரவ மற்றும் வாயு நிலையில் இருக்கும் ஒரேஉலோகம் பாதரசம் மட்டுமே. அது மிக மெதுவாக திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு சாதாரண வெப்ப நிலையிலேயே மாறும்.அந்த வாயுவுக்கு நிறமோ மணமோ கிடையாது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X