For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நமது மொழிக்கு ஒரு நிறுவனம்

By Staff
Google Oneindia Tamil News

Tamilகர்நாடக மாநிலத்திலுள்ள நகரங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த நகரம் மைசூர். மக்கள் தொகை பெருக்கத்தால் பாதிக்கப்படாத பெரு நகரம். இந் நகரத்தில்அமைந்துள்ள மிக முக்கியமான ஒரு நிறுவனம் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஆகும்.

மத்திய அரசு, தமிழைச் "செம்மொழியென அறிவிக்கவும் தகுந்த ஆவணங்களைப் பெறவும் மைசூரிலுள்ள "இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தைத் தான்அணுகியது. இந்தியாவில் 1652 மொழிகள் இருக்கின்றன. ஆனால் ஆட்சி மொழிகள் பதினெட்டுத் தான்.

இந் நிறுவனத்தைப் பற்றி...மத்திய அரசின் கல்வி மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தால் 1969 சூலை 17ம் தேதியன்று இந் நிறுவனம் துவக்கப்பட்டது.மொழியியல் ஆய்வுகளின் அடிப்படையில் இந்திய மொழிகளைக் கற்பிக்கவும், பாட நூல்கள் தயாரிக்கவும், பல துறைகளில் மொழிகளைப் பயன்படுத்தவும்,மொழிகளின் ஆராய்ச்சிக்கு உதவுவதும் இந் நிறுவனத்தின் முதன்மையான பணிகளாகும்.

இந் நிறுவனத்தின் மொழி அறிஞர்களும், அதன் இயக்குநரும் திரைக்குப் பின்னாலிருந்தும், தமிழகத்திற்கு வெளியே இருந்தும் "தமிழுக்காக எப்போதும்,ஏதேனும் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்கள் உலகத்தின் எந்த மூலையிலிருந்தும், தமிழை முறைப்படிக் கற்றுக் கொள்ள இந் நிறுவனம் "தமிழ்-இணைய தளம்பயிற்சியை கடந்த மாதம் துவக்கியுள்ளது.

பல்கலைக்கழக மொழியியல் துறைகள், மாநிலக் கல்வி நிறுவனங்கள், பழங்குடி மொழி ஆய்வு நிறுவனங்கள், கல்வெட்டியல் அலுவலகங்கள் போன்றகல்வி சார்ந்த நிறுவனங்களை இணைக்கும் பாலமாக இது செயல்படுகிறது.

இந் நிறுவனம் ஆற்றிவரும் பணிகள்:

உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளைப் பெற்று, உடனுக்குடன் இந்தியாவில் தேவையானவர்களுக்கு அளிப்பது,இந்திய மொழிகளைப் பற்றிய வரலாறு, இலக்கியம், நாட்டுப்புறவியல், சொற்கோவை, இலக்கணம், மொழியின் அமைப்புகள், பண்பாட்டு அமைப்புகள்

போன்றவற்றின் ஒற்றுமையை வெளிக் கொணர்ந்து அறிஞர்களுக்கு உதவுதல்.

Tamil researchஅந்தமான், நாகாலாந்து போன்ற நாட்டின் பல பகுதிகளில் பழங்குடியினர் வாழ்கின்றனர். அவர்களின் கல்வியறிவுக்கும், அந்தப் பகுதிகளில் பணிக்காகச்செல்லும் அரசு ஊழியர்களுக்கும், அப்பகுதியில் பேசப்படும் மொழியினைக் கற்பித்தல்.இந்தியாவில் மொழி கற்பித்தல் என்பது மரபு சார்ந்ததாகவேஉள்ளது.

இதற்குப் புத்துயிரூட்டி மொழியைக் கற்பிக்க புதிய உத்திகளையும், முறைகளையும் குறுகிய காலப் பயிற்சியில் ஆசியர்களுக்குக் கற்றுக் கொடுப்பது.இரண்டாம்மொழியாக இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் விதமாக, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில்தலா பத்து ஒலி நாடாக்களை வெளியிட்டுள்ளது.

முதல் மொழியாகக் கற்றுக் கொள்பவர்களுக்கும் தலா பதினைந்து ஒலி நாடாக்களை வெளியிட்டுள்ளது.இந்திய மொழிகளுக்குள் மொழி பெயர்ப்புக்குபுதிய உத்திகளைக் கற்பிப்பது, பயிற்சியளிப்பது மற்றும் மொழிப்பெயர்ப்பு, மொழி வளர்ச்சி நூல்கள் வெளியிடப் பண உதவி அளித்தும்,

மொழிகளைப் பற்றிய கருத்தரங்குகள், மொழிப் பட்டறைகள், மொழிப் பயிற்சிகள் போன்றவற்றை அடிக்கடி நடத்திக் கொண்டிருக்கும்நிறுவனம்.ஆசியர்கள் இல்லாமல் இணைய தளத்தில் மொழிகளைக் கற்றுக்கொள்ள தமிழ், கன்னடம், வங்காளம் போன்ற மொழிகளில் தற்போது புதியஇணைய தளத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் மூலம் கல்வி கற்பிக்க, "பாஷா மந்தாகினி என்னும் நிகழ்ச்சியைத் தமிழ், கன்னடம், வங்காளம்மொழிகளில் தலா ஆயிரம் பகுதிகளாக ஒளிபரப்ப அந்தந்த மொழி அறிஞர்களுடன் கலந்தாலோசனைகளை நடத்திக் கொண்டுள்ளது.

பாடத்திட்டம், படப்பிடிப்பு எனப் படு சுறுசுறுப்பாக இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 25,000 பள்ளித்தமிழ் ஆசியர்களுக்கு பணியிடை பயிற்சி, தமிழில் 593 நபர்களுக்குத் தொலைதூரக் கல்வி மூலம் பயிற்சியும் அளித்துள்ளது.

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழிகளான பதினெட்டில் இந்தி, சமசுகிருதம், கொங்கணி தவிர, மற்ற பதினைந்து மொழிகளுக்காக இவர்களின்அனைத்து மையங்களிலும் சேர்ந்து முன்னூறு மொழியறிஞர்கள் இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றனர்.

மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இந்தியாவில் ஆறு கிளைகள் ""மண்டல மொழி மையங்களாகச்செயல்படுகின்றன. ஒரிசா மாநிலம் புவனேசுவரில், வங்காளி - அசாமி - ஒரியா மொழிகளுக்காகவும், மராட்டிய மாநிலம் புனேயில், மராத்தி -குசராத்தி - சிந்தி மொழிகளுக்காகவும்,

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பஞ்சாபி - காஷ்மீரி - உருதுக்காகவும், அசாம் மாநிலம் கெளகாத்தியில் நேபாளி -மணிப்பூரிக்காகவும்,உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலும், இமாச்சல பிரதேச மாநிலம் சோலனிலும் உருது மொழிக்காகவும்,

மைசூரில், தமிழ் - தெலுங்கு - மலையாளம் - கன்னடம் ஆகிய மொழிகளுக்காகவும் தென்னிந்திய மொழிகள் நிறுவனம் செயல்பட்டு வருகின்றன.தமிழ்செம்மொழியென அறிவிக்கப்பட காரணமாக இருந்த இந் நிறுவனம், தற்போது தமிழை இணையதளத்தில் கற்கத் தேவையான அனைத்து வசதிகளையும்செய்துள்ளது.

இந் நிறுவனத்தில் பணி புரியும் தமிழறிஞர்கள் பலர் உள்ளனர். முனைவர் க.இராமசாமி, முனைவர் பொன்.சுப்பையா, முனைவர் ந.நடராச பிள்ளை, முனைவர்சாம்.மோகன் லால், முனைவர் பிரேம், முனைவர் பாலகுமார் மற்றும் திரு.வெங்கடேசன், தொல்காப்பியன், முனைவர் செல்வக்குமார் ஆகியோரும்தமிழுக்காக பணிபுரியும் முக்கியமானவர்களில் சிலராவர்.

(தென் செய்தி கட்டுரை)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X