• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னைப் பற்றி நானே

By Staff
|

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

(எல்லே ராம் என்கிற பாத்ரூம் பாகவதர் என்கிற எட்டாம் நம்பர் கடை கபாலி என்கிற ராமானந்த ஜித்தன்என்கிற.....")

==========================

Ram"அவரைப் பற்றி வம்படியாக, கிண்டலாக ஏதாவது எழுதுங்கள்", "இவரைப் பற்றி ஏதாவது அய்யம்பேட்டைத்தனமாகத்தூண்டில் போடுங்கள்" என்று சொல்லியிருந்தால் எனக்கு அல்வா (மாயவரம் காளியாகுடி அல்வா) சாப்பிடுவது போலஇருந்திருக்கும்.

என்னைப் பற்றி நானேவா...?

சற்றே நாணம் கலந்த மெளனத்திற்குக் காரணம் அடக்கம் அல்ல. விஷயமே இல்லையே என்கிற பயம்.

மாயவரம் அருகே உள்ள நல்லத்துக்குடி கிராமத்திற்கு அகில உலக அந்தஸ்து தேடித் தரும் விதத்தில் நான் அங்கே அவதரித்தேன்,அப்போது வானில் கோள்கள் மின்னின, நட்சத்திரங்கள் ஜொலித்துக் கண்ணடித்தன, வாயு பகவானும் நவக்கிரகங்களும் ...என்றுஏதாவது ஜல்லியடித்தால் அடிக்க வருவீர்கள். பிறந்தவுடன் மருத்துவச்சியைப் பார்த்துக் கண்ணடித்து I love you என்றுசொன்னதை வேண்டுமானால நம்பலாம்.

பள்ளிப் படிப்பு எல்லாம் நேஷனல் ஹை ஸ்கூல் தான். Rank Holder என்றெல்லாம் சொல்ல முடியாது. PrankHolder என்று வேண்டுமானால் சொல்லலாம். IIT, அஹமதாபாத் எல்லா இடத்திலும் இடம் கிடைத்தும் (!?),A.V.C. கல்லூரிக்குத் தான் போவேன் என்று பெற்றோரைப் படுத்தியதற்கு இன்னமும் மானசீகமாக paybackபண்ணிக் கொண்டிருக்கிறேன். மன்னம்பந்தல் அன்பநாதபுரம் வகையறா கல்லூரியும் அகில உலகப் புகழ் பெறவேண்டாமா?

கல்லூரிக்குப் பிறகு மதுரையில் மெடிக்கல் ரெப் வேலையில் குப்பை கொட்டிய வருடங்கள் இனிமையானவை.395, வடக்கு மாசி வீதியில் மூன்றாவது மாடியில் தனிக்காட்டு ராஜா. முதல் மோட்டார் சைக்கிள். எக்கச்சக்கநண்பர்கள்.

பிறகு 70களில் சென்னை என்னைத் தன் வசப்படுத்திக் கொண்டது. டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி போன்றநண்பர்கள் சகவாசம். டிராமா பார்க்கப் போனால் திடிரென்று உடனேயே அப்படியே ஸ்டேஜில் நடிக்கச்சொல்வார்கள். "மன்மத லீலை"யில் நடிக்கக் கூப்பிட்ட K. பாலசந்தரிடம் அடுத்த மாதமே அமெரிக்கா போய்க்கொண்டிருப்பதாக ஹரிச்சந்திர உண்மையைச் சொல்லித் தொலைத்து, அமெரிக்க MBA முயற்சியும் எதிர்பாராமல்தோல்வியடைந்து நான் தேவதாசாக இருக்கையில், எதிர் வீட்டுப் பையன், இன்னும் சில நண்பர்கள் சொல் கேட்டு,வேண்டாவெறுப்பாகப் போய் நின்ற சின்னத்திரைக்கு என்னைப் பிடித்துப் போனது.

வேலையில் இருந்தபடியே, சென்னை தொ(ல்)லைக் காட்சியில் Announcer, Compere. பல ஆண்டுகளுக்குத்தினந்தோறும் டெலிவிஷனில் என் முகத்தில் பல தடவை விழிக்க வேண்டிய கொடுமை சென்னைவாசிகளுக்கு.ஆனால் அதுவே எனக்குப் பல கதவுகளைத் திறந்ததும் உண்மை. "அவள் ஒரு தொடர்கதை" M. S. பெருமாள்,தஞ்சைவாணன் ...எத்தனை ப்ரொக்ராம்கள்! தொழிற்சாலைகள் பற்றி, தொழு நோய் நிலையங்கள் பற்றி,எத்தெத்தனையோ. தமிழ்நாடு ஹவுசிங் போர்டு பற்றிய ப்ரொக்ராமில் சேர்மன் செல்லையாவைக் கிழி கிழி என்றுகிழிக்கப் போய், ஆச்சரியப்படும்படியாக ஃப்ளாட் அலாட்மெண்டே கிடைத்தது. அப்போதெல்லாம் ஆட்டோவில்வீடு தேடி வந்து அடிக்க மாட்டார்கள். அரசியலில் ஆரோக்கியம் கொஞ்சம் மிச்சம் இருந்தது.

டெலிவிஷனில் கூடவே வேலை செய்த announcer மஞ்சுவைக் கைப்பிடித்ததைச் சொன்னேனோ? பையன்பிறந்தது இந்தியாவில், பெண் அமெரிக்காவில்.

கமல்ஹாசன் நண்பரானார். அவர் அண்ணா சாருஹாசன் சிலரை அறிமுகம் செய்து வைத்தார். "பன்னீர் புஷ்பங்கள்"முதல் படம். எனக்காக இல்லாவிட்டாலும் படம் நன்றாக ஓடியது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் நேரம் தானா,அமெரிக்க விசா திடீரென்று கிடைக்க வேண்டும்? சினிமாவுக்குச் சின்ன டாட்டா. அமெரிக்கா வந்தால் அதுவும்பிடிக்கவில்லை. திரும்பவும் சென்னைக்குப் போனால், ரஜினி கூப்பிட்டுக் கொடுத்த படம், "எங்கேயோ கேட்டகுரல்". அம்பிகாவுடன் செகண்ட் ஹீரோ. பல பத்திரிகைகளில், யார் இந்தப் புதுமுகம்?, பிரமாதமாகச்செய்திருக்கிறாரே, நன்றாக வருவார் ஹேஷ்யங்கள். பஞ்சு அருணாசலம் "ஜப்பானில் கல்யாணராமனு"க்கும்,S.P. முத்துராமன் "பாயும் புலி"க்கும் தேடும்போது, மறுபடி லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பி விட்டேன்.

ஏர்லைன்ஸ்காரர்கள் பிழைக்க வேண்டாமா?

விடா மூச்சுடன் அமெரிக்காவில் உழைப்புக்கு வெற்றியாக பதவிகளும், பணமும், வீடுகளும், பென்சும்கிடைத்தபோதிலும், திரைத்துறையைத் திரும்பப் பார்க்காமல் இருந்தவனை மறுபடியும் இழுத்துப் போட்டவர்டைரக்டர் ஷங்கர். "ஜீன்ஸி"ல் ஐஸ்வர்யா என் கைத் தலம் பற்ற, நான் அவர் கைத் தவம் பெற, எத்தனை நண்பர்கள்பொறாமைத் தீயில் வெந்தார்கள்!She is really a nice girl.

லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ் சங்கத் தலைவர் என்கிற வெறும் பந்தா பதவி. 95லிருந்து சொந்த நாடகங்கள் "HelpUnwanted", "One Wife Too Many", "ஐந்திரக் கண்டத்தில் அதி ருத்ர மஹா யாகம்", "Sambavami USA USA"போன்ற தமிழ் காமெடி நாடகங்கள். "யாகம்" மட்டும் சுஜாதா கதையை நாடகமாக்கி அவரிடம் பாராட்டுபெற்றேன். மற்ற எல்லாமே கதை, வசன, டைரக்ஷன், தயாரிப்பு, அரை டிக்கெட் செக்கிங் அய்யா தான்.நிஜமாகவே அமெரிக்க நிலைக்களன் கொண்ட டிராமாக்கள் என்பதால் புது genre. பல இடங்களிலிருந்தும்கூப்பிட்டு ரசிக்கிறார்கள்.

ICICI கம்பெனியில் Senior Vice President ஆக இருந்தாலும், அமெரிக்க வாசத்திலும் தமிழ் மண்ணின்வாசனையை மறக்காமல் சென்னையில் "ப்ரிய ஸகி" கவிதைத் தொகுப்பு வெளியீடு, மறக்க முடியாத அகில உலகத்தமிழ் இணைய நட்புகள், தமிழ்த் திரைத் துறை முன்னணியினருடன் இன்னமும் தொடரும் சீரானபாசம்...பாரதிராஜாவும் நெப்போலியனும் இப்போதுதான் போனார்கள், மணி ரத்னம், சுஹாசினி அடுத்த விசிட்வந்து கொண்டேயிருக்கிறார்கள்...!

வாழ்க்கை ஓடிக் கொண்டேயிருக்கிறது!

சென்னையிலும் அமெரிக்காவிலும் ஒரே நேரத்தில் இருப்பது எப்படி? அது தாங்க தெரியலை!

என்றென்றும் பேரன்புடன்,

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (ramnrom@yahoo.com)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more