For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்பிக்கை:

By Staff
Google Oneindia Tamil News

ராம்குமார், சிங்கப்பூர்

நம்பிக்கை - இது இல்லாமல் வாழ்க்கையில் முன்னேறுவது அரிது. ஆத்திகனுக்கு கடவுள் நம்பிக்கை. நாத்திகனுக்கு நம்பிக்கைகடவுள். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் நம்பிக்கை இல்லாத விஷயம் இல்லை என்பது தான் உண்மை.

இளமதி என்ற ஒருவரின் கற்பனையில் வந்த ஒரு கருத்தை தற்போது கூறுகிறேன். மீன் தொட்டிக்குள் இருக்கிறது. அதற்குதப்பிக்கத் தெரியவில்லை. கிளி கூண்டுக்குள் இருக்கிறது. வெளியே வரவோ அல்லது தப்பிக்கவோ அல்லது அதற்கான முயற்சிஎடுக்கவோத் தெரியவில்லை. சூழ்நிலைக் கைதிகளாக இருக்கின்றது. ஆனால் சட்டத்தின் பிடியில் இருக்கும் ஒரு திருடன்சிறையிலிருந்து தப்பிக்கிறான்.

Alexandar5 அறிவு உள்ளவை அனைத்தும் தப்ப முயற்சி எடுக்கவில்லை. நாம் அனைவரும் மனிதர்கள் என்று சமமாகப்படைக்கப்பட்டவர்கள். எண்ணியதை எண்ணியாங்கு எய்தும் திறன் படைத்தவர்கள். ஆனால் அனுபவங்கள் சமமாகப் பகிர்ந்துஅளிக்கப்படவில்லை. நம்பிக்கையும் அவரவர் தனிப்பட்ட விஷயங்கள். தவறான மனிதன் எடுக்கும் முயற்சி தற்காலிக வெற்றிஅடைகிறது. காரணம் நம்பிக்கை.

தப்பான முயற்சிக்கு நம்பிக்கை துணை போகும் போது, நாம் எடுக்கும் நல்ல முயற்சி வெற்றி அடையாமல் போகுமா ? நீங்கள்நியாயமான தேவைகளுக்காக நம்பிக்கை வைக்கும் போது அது பன்மடங்காக வெற்றித் தர வேண்டுமே. உயர்ந்த நம்பிக்கைஎப்படி வீண் போகும்? வெற்றி அடையவில்லை என்றால், ஒன்று நம் முயற்சி சரியில்லை. அதை விட, நம் எடுத்த முயற்சியில்,நாம் நம்பிக்கை வைக்க வில்லை என்பது தான் மிகப் பெரிய உண்மை. இளமதியின் இந்தக் கருத்து நம் வாழ்வில் என்றென்றும்நினைவில் கொள்ள வேண்டியவை.

ஒரு முறை போர் நடந்து கொண்டிருக்கிறது. மாவீரன் அலெக்ஸாண்டர், பக்கம் கூட்டம் குறைய ஆரம்பித்தது. தோல்வி அவனைநோக்கி அழையாத விருந்தாளியாக வந்துக் கொண்டிருந்த நேரம். அவனுடைய தளபதி, மன்னா எதிரிகளிடம் ஒரு லட்சம் பேர்இருக்கிறார்கள். நம்மிடமோ பாதி பேர் தான் இருப்பர்கள் போலத் தெரிகிறார்கள் என்றான். சிரித்துக் கொண்டு அலெக்ஸடண்ார்என்னை சேர்க்காமல் தானே சொல்கிறாய். என்னையும் சேர்த்துக்கொள். போருக்குத் தயாராகுங்கள் என்றான். இது எதைக்காட்டுகிறது. 50,000 பேருக்கு நிகரான வீரம் அவனிடம் உள்ளது என்ற அவனது நம்பிக்கையைத் தானே காட்டுகிறது.

கொலம்பஸ்கும் மெகல்லனுக்கும் இயற்கை எதிரியாக இருந்த போதும் வெற்றிக் கனியை முத்தமிட்டது எப்படி ?? ஒரு நாட்டைஅதன் பின் கண்டுபிடிக்க யுகங்கள் ஆயிருக்கும். உலகம் உருண்டை என்ற உண்மையை உணராமலே போயிருப்போம்.

நாம் ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும் போதே பயமும் நம்மைப் பற்றிக் கொள்கிறது. இது இயற்கையின் நியதி. மறுக்க முடியாதஉண்மை. வீடு என்று இருந்தால் சமையல் அறையும் இருக்கும். கழிவறையும் இருக்கும். எதை எப்படி எவ்வளவு முக்கியத்துவம்கொடுக்க வேண்டும் என்று நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

நம் செயலின் வெற்றியை தீர்மானிக்கும் திறன் நாம் வைக்கும் நம்பிக்கை மீது தான் உள்ளது. இந்த உண்மையைப் புரிந்துக்கொள்ளுதல் மிகமிக அவசியம். 100 ஆற்றல் மிக்க இளைஞர்களைக் கொடுங்கள். இந்தியாவை மாற்றிக் காட்டுகின்றேன் என்றுவிவேகானந்தர் சவால் விட்டுக் கூறினார் என்றால் என்ன தெரியுமா ? 2 விஷயங்கள். 1 இளைஞர்கள் மீது அவருக்கு இருந்தநம்பிக்கை. 2 இந்தியாவை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை. நாட்டிற்கும் சரி வீட்டிற்கும் சரி, நம்பிக்கை மிக மிக அவசியம்.

முடியாது என்ற மூட நம்பிக்கை கொண்டவர்களுக்கு வாழ்க்கை என்றுமே பாலைவனம் தான்.

முடியும் என்பதை முலதனமாக்கிக் கொண்டவர்களுக்கு வாழ்க்கை என்றுமே சோலைவனம் தான்.

-ராம்குமார் ([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X