இருட்டறையில் கிடக்கும் தமிழ்க் கல்வெட்டுக்கள் தமிழன் தொன்மையை மறைக்கும் முயற்சி
- தென் செய்தி
மனிதர்கள் சமுதாயமாக வாழத் தொடங்கிய போது சிலவற்றைப் பதிவு செய்யத் தொடங்கினர். தாங்கள் வாழ்ந்த குகைகளில்உருவங்களைத் தீட்டியும், கீறியும் தம் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்தனர். இத்தகைய பதிவுகளின் வளர்ச்சியே எழுத்தின்தோற்றத்திற்கான அடிப்படையாக அமைந்தது.
எழுத்துக்கள் தோற்றுவிக்கப்பட்டு வளர்ச்சி அடைந்த நிலையில் ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. மண் கல ஓடுகளிலும், மலைக்குகைகளிலும் காணப்படும் எழுத்துப் பொறிப்புகள் பண்டைய வரலாற்றினை வெளிப்படுத்தும் சிறந்த தொடக்க கால ஆவணங்களாகும்.
இத்தகைய ஆவணங்களில் கல்வெட்டுகள் காலத்தை வென்று வாழும் இலக்கியங்கள் என்று கூறினால் மிகையாகாது. கோவில்கள்,சுற்றுச்சுவர்கள், பொதுமண்டபங்கள், ஏமதகுகள், மலைக் குகைகள் போன்றவற்றில் இவை பொறிக்கப்பட்டன. மன்னர்களும், அவர்தம் குடும்பத்தினரும், அதிகாரிகளும் வெட்டுவித்த செய்திகள் அவர்கள் வாழ்ந்த காலச் செய்திகளைவெளிப்படுத்துபவையாகும்.
|
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக
மனிதர்கள் சமுதாயமாக வாழத் தொடங்கிய போது சிலவற்றைப் பதிவு செய்யத் தொடங்கினர். தாங்கள் வாழ்ந்த குகைகளில்உருவங்களைத் தீட்டியும், கீறியும் தம் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்தனர். இத்தகைய பதிவுகளின் வளர்ச்சியே எழுத்தின்தோற்றத்திற்கான அடிப்படையாக அமைந்தது.
தொன்மையான இப்பதிவு காலப்போக்கில் வளர்ச்சியடைந்து ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் எனப் பலவகையிலும்பெருகின. இந்தியாவில் இதுவரைக் கிடைத்த இத்தகைய ஆவணங்களில் 75 விழுக்காட்டிற்கு மேற்பட்டவை தமிழ் ஆவணங்களே என்பதுகுறிக்கத்தக்கதாகும்.
தமிழர்களின் வரலாற்றை எழுதுவதில் கல்வெட்டுச் செய்திகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஆங்கிலேயன் ஆட்சிக் காலத்தில்தொல்லியல்துறை தொடங்கப்பட்டு கல்வெட்டுக்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும், படி எடுக்கவுமான பணி ஆரம்பமாயிற்று.
கி.மு. 5ம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை உள்ள கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்க் கல்வெட்டுக்களின்பெருந் தொகையைக் கண்ட ஆங்கிலேய அரசு சென்னையில் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவைத் தொடக்கியது. பிறகுஉதகமண்டலத்திற்கு மாற்றப்பட்டு, பிறகு 1966ஆம் ஆண்டில் மைசூருக்கு மாற்றப்பட்டு விட்டது.
மேலும் ஆண்டுதோறும் 300-400 புதிய கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுத் தமிழ்க் கல்வெட்டுக்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது.











Click it and Unblock the Notifications